ஈஸ்வரி காலில் விழாத குறையாக கைகூப்பி அழுத குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய நிகழ்ச்சியில் ஈஸ்வரி ஜனனியிடம் பல விஷயம் குறித்து பேசுகிறாள். இந்த வீட்டில் 23 வருடங்களாக நான் கஷ்டப்பட்டது உண்மைதான். அதற்கு காரணம் என்னுடைய குழந்தைகள், அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கஷ்டப்பட்டேன். ஆனால், நான் கஷ்டப்பட்டாலும் என்னுடைய குழந்தைகள் நன்றாக இருக்கிறார்கள். அவர்களை நன்றாக படிக்க வைத்திருக்கிறார்கள். இதைவிட ஒரு அம்மாவுக்கு என்ன வேண்டும்.

இத்தனை நாள் நம்ம நாலு பேரும் ஒத்துமையா இருந்தோம் அதற்கு காரணம், இந்த வீட்டில் இருக்கும் ஆண்கள் அடக்கி வைத்தது தான். அந்த விஷயம் நாலு பேருக்கும் பிடிக்காததால் அந்த விஷயத்தை எதிர்த்து ஒற்றுமை இருந்தோம். சமையல் அறையை விட்டு வெளியில் வரவேண்டும் என நினைத்தோம். ஆனால் அதை விட்டு எங்களால் வெளியே வர முடியவில்லை. நான் மட்டும் இல்ல, நந்தினி ,ரேணுகா என அனைவருமே இந்த குடும்ப சூழ்நிலையால் தான் இப்படி இருக்கிறோம். ஆனால் நீ அப்படி இல்ல ஜனனி, எங்களைப் போல் நீ இரு என்று நாங்கள் சொல்லவில்லை. அதேபோல நீயும் எங்களை எந்த விஷயத்திலும் கட்டாயப்படுத்தாதே. என்னுடைய கணவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார், நான் அவரை மன்னித்து விட்டேன். மன்னிப்பதற்கு மிகப்பெரிய மனசு வேண்டும், அந்த மனசு எனக்கு இருக்கு, அதோடு மட்டுமல்லாமல் அந்த மன்னிப்பில் உண்மை இருக்கு என நான் நம்பியதால் மன்னித்து விட்டேன்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: ரேணுகா, நந்தினி இருவருமே கதிர், ஞானத்தை மன்னித்துவிட்டார்கள். நிம்மதியான வாழ்க்கை வாழ நினைக்கிறார்கள். ஆனால், நீ அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என நினைக்கிற, தாராளமாக அவர்கள் செய்த தப்புக்கு தண்டனை வாங்கிக் கொடு, அதில் எங்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை. இதுதான் என்னுடைய முடிவு, இன்னைக்கு வாழும் வாழ்க்கையை சந்தோஷமாகவும், என்னுடைய குழந்தைகளுடன் வாழ வேண்டும் என நான் நினைக்கிறேன். எல்லாம் தெரிந்த ஜனனிக்கு இந்த விஷயம் புரியும் என்று நம்புகிறேன். இதற்கு மேல் என்னுடைய மகளை தொல்லை படுத்தாதே என சொல்லி விட்டு தர்ஷினியை அழைத்துக் கொண்டு கீழே வருகிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

மன்னிப்பு கேட்கும் குணசேகரன்: கீழே இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிற குணசேகரன், ஈஸ்வரி... இந்த வீட்டில் இருப்பவர்களை விட நீதான் புத்திசாலி, நான் பல விஷயங்களில் உன்னை புண்படுத்தி விட்டேன். இந்த மீனாட்சி அம்மன் தாயை விட பல மடங்கு உயர்ந்து விட்டாய். இந்த குடும்பம் நன்றாக இருக்க ஒரு பெண் என்ன வேண்டும் என்பதற்கு நீ உதாரணமாக இருக்க. உண்மையிலேயே நான் செய்த அனைத்துக்கும் என்னை மன்னித்துவிடு என கையைக் கூப்பி மன்னிப்பு கேட்கிறார்.

நம்பிக்கை இல்லை: அதன் பின் ராவணன் வீட்டுக்கு வந்து அடுத்த கட்ட பிசினஸ் காண வேலைகளை பார்க்க வெளியில் செல்ல வேண்டும் என பேசிக்கொண்டு இருக்கிறார். அந்த நேரத்தில் ஜோசியர் ஒருவர் வீட்டுக்குள் வருகிறார். குணசேகரன், ராவணானிடம் இவர்தான் நம்ம வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும், நல்லது கெட்டது பார்த்து சொல்லும் ஜோசியர் என சொல்கிறார், உடனே ராவணன் அதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையே இல்லை என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X