பத்திரத்தில் கையெழுத்து போட்ட நேரம் வெடித்த டிரான்ஸ்ஃபார்மர்.. அபசகுனத்தால் நடுங்கிப்போன குணசேகரன்
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடில், கதிர், ஜனனியின் குழந்தையை கலைக்க வேண்டும் என்று பேசியதை நினைத்து நந்தினி மிகுந்த வேதனையில் புலம்கிறாள். சமையலறையில் அதைப் பற்றியே புலம்பிக் கொண்டிருக்க, இந்த மனுஷனுக்கு எத்தனை முறை சொன்னாலும் அறிவே வராது. இப்படியெல்லாம் பேசினால் ஜனனியின் மனசு எவ்வளவு கஷ்டப்படும். ஏற்கனவே இப்படிக்கூடானு சொல்ல இருக்கேன். ஆனாலும் தொடர்ந்து அதையே செய்கிறார். இந்த வீட்டை விட்டு வெளியில் நம்மதான் போக முடியாது, அந்த ஜனனியாவது எங்கையாவது போய் இல்லா இருக்கும்னு பாத்தா அந்த பெண்மையும் வெளியில் அனுப்பாம இப்படி பண்றாங்களே என வருத்தப்படுகிறாள்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: அதன்பிறகு, ஜனனிக்காக ஜூஸ் தயாரித்து எடுத்துக்கொண்டு, ஜனனியின் அறை கதவை தட்டுகிறாள்.ஆனால் வீட்டின் கதவைத் திறக்கும் விசாலாட்சி, எதற்காக நீ வந்த? உன் கணவர் செய்த பிரச்சனைகள் போதாதா? இப்போது நீயும் வந்து புதிதாக பிரச்சனை செய்யப் போகிறாயா? என்று கோபமாக கேட்கிறார். அதற்கு நந்தினி, அத்தை, நான் ஜனனியிடம் பேசுவதற்காகத்தான் வந்தேன். என்னிடம் தேவையில்லாமல் பேச வேண்டாம். குடும்பத்தில் பெரியவங்க நீங்க, அனைவரையும் ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும். ஆனால், நீங்கள் எங்களைப் பிரித்துக் கொண்டே இருக்கிறீர்க. எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீங்கள் தான் என்கிறாள். இதைக் கேட்ட விசாலாட்சி, எல்லாவற்றுக்கும் நான்தானா காரணம்? உன் புருஷன் பேசும்போது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது வந்து நல்லவள் மாதிரி நாடகம் போடுகிறாயா? என்று பேச சண்டையை பெரிதாக்குகிறார். சூழ்நிலை மோசமானதை புரிந்து கொண்ட, ஈஸ்வரி நந்தினியை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார்கள்.

அபசகுனம்: மறுபக்கம், ராவணன் தனது வீட்டிற்கு குணசேகரன், கதிர், ஞானம் ஆகியோரை அழைத்துச் செல்கிறார். அங்கு ஆடிட்டர் அனைவருக்காக காத்திருக்கிறார். பிசினஸ் தொடர்பான அனைத்து ஆடிட்டிங் வேலைகளும் முடிந்துவிட்டது. நீங்கள் கையெழுத்து போட வேண்டியது மட்டும்தான் பாக்கி என்று சொல்கிறார். அப்போது கரிகாலன், சரியா போச்சு, இவங்க யாருக்குமே ஆங்கிலம் படிக்கத் தெரியாதே, என்று சொல்ல, ராவணன் ஆடிட்டரிடம் அனைத்து ஆவணங்களையும் படித்துக் காட்டச் சொல்கிறார். ஆடிட்டரும் ஒவ்வொன்றாக வாசித்துக் காட்டுகிறார்.
தனிகுடித்தனம் போகும் ஜனனி: கதிர் கையெழுத்திட தயாராகும் நேரத்தில், திடீரென அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் வெடித்து பெரிய சத்தம் வருகிறது. அந்த சம்பவம் ஒரு அபசகுனமாக இருந்தாலும் அனைவரும் கையெழுத்து போடுகின்றனர். மறுபக்கம், தனிக்குடித்தனம் போவதற்காக வீட்டில், வாடகைக்கு வீடு பார்த்துவிட்டு வரும் சக்தி, ஒரு வீடு நல்லா இருக்கு ஜனனி, ஆனால் அவங்க 10 மாச வாடகையை அட்வான்சாக கேக்குறாங்க என்று சொல்கிறார். இதனால், ஜனனி அட்வான்ஸ் பணத்திற்கு என்ன செய்வது என்று யோசிக்கிறாள். இதையடுத்து, அடுத்து என்ன நடக்கப் போகிறது?என்பதை பார்க்கலாம்


Click it and Unblock the Notifications