இனிமே உனக்கு சித்தியும் கிடையாது.. சித்தப்பாவும் கிடையாது.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடில் ராணா வீட்டில் இருந்த குணசேகரன், கதிர், ஞானம் என அனைவருமே தனியாக அழைத்து நீங்கள் சக்திக்கு எதுவும் செய்யவில்லை என்பதுதான் அம்மாவின் வருத்தமாக இருக்கிறது. இதனால், நீங்கள் சக்தியை அழைத்து பேசினீர்க என்றால் அம்மாவும் சமாதானம் ஆவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்ன சொல்கிறார். இதைக்கேட்டு ஆத்திரப்படும் கதிர், சக்தியிடம் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. அவன் ஒரு ஆளு கிடையாது என சொல்கிறார். ராணா எவ்வளவு எடுத்து சொல்லியும் கதிர் அதற்கு உடன்படவில்லை
எதிர்நீச்சல் தொடர்கிறது: இதைஅடுத்து வீட்டிற்கு வந்திருக்கும் தர்ஷன், சக்தி மற்றும் ஜனனியிடம் பேசுகிறான் எதற்காக நீங்கள் யாரிடமும் சரியாக பேசாமல் இங்கேயே இருக்கிறீர்கள் என்ன பிரச்சனை நடந்தது என கேட்கிறார். அப்போது விஷாலாட்சி என்ன பிரச்சனை நடந்தது என்று உன் அம்மாவிடம் சென்று கேள் என்கிறார். அப்போது அங்கு வரும் குணசேகரன், டேய் தர்ஷா அவங்க என்ன செஞ்சாங்க தெரியுமா... உன் சித்திக்கும், சித்தப்பாவும் தனி குடுத்தனம் போக போறாங்க, அதற்காக வீடு தேடிக்கட்டு இருக்காங்க, எதுக்கு வீடு தேடி அலையனும் நம்முடைய பழைய பூர்வீக வீடு இருக்கே, அங்கேயே போய் இருந்துக்கோங்க என சொல்லுகிறார்.

கோவப்பட்ட குணசேகரன்: இதைக்கேட்டு ஆத்திரப்படும் சக்தி, நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். சொத்தில் எந்தவிதமான பங்கு தேவையில்லை என்று நாங்களே சமாளித்து கொள்கிறோம் என சொல்கிறார். அப்போது விசாலாட்சி, உங்களுடைய உதவி எதுவும் தேவையில்லை என்று சொல்ல கோபமடையும் குணசேகரன், வயசான காலத்தில் உன்னுடைய புத்தி கெட்டு போயி இப்படி நடந்து கொண்டே இருக்க என கத்துகிறார். அந்த நேரத்தில் கதிர், டேய் தர்ஷன் இந்த வீட்டில் இதுக்கு மேல உனக்கு சித்தியும் கிடையாது சித்தப்பாவும் கிடையாது. நாங்க ரெண்டு பேரும் மட்டும்தான். இவங்க என்ன என்ன வேலை செஞ்சாங்க தெரியுமா....
தர்ஷினியை கடத்திக் கொண்டு போய் வச்சுக்கிட்டு படாத பாடு படுத்தினாங்க, இப்ப தர்ஷினி இந்த நிலைமையில இருக்குறதுக்கு காரணமே உன்னுடைய சித்தியும் சித்தப்பாவும் தான். இதுக்கு மேல நீ அவங்க கிட்ட எந்த விதமான பேச்சு வார்த்தையும் வச்சுக்க கூடாது.. நாங்க மட்டும் சரியான நேரத்துக்கு போகலனா... இந்நேரம் தர்ஷினியை நம்ம உயிரோடவே பார்த்திருக்க முடியாது என்று சொல்கிறார். இது எல்லாத்தையும் கேட்டு எதை நம்புவது எதை நம்பக்கூடாது என்கின்ற மனநிலையில் தர்ஷன் இருக்கிறார். இதை அடுத்து நாளை என்ன நடக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்


Click it and Unblock the Notifications