மெட்ராஸ்ல இருந்து வந்த அனாதை அவ.. ஜனனியைப் பற்றி கேவலமாகப் பேசிய குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடில் குணசேகரன் ராவணன் அனைவருமே பிசினஸ் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ராவணன், ஜனனிக்கு யாருமே இல்லையா என விசாரிக்கிறார் அப்போது குணசேகரன் ஏன் இல்ல ஜனனியே மெட்ராஸில் இருந்து தான் என் தம்பிக்கு திருமணம் செய்து கொண்டு வந்தேன். அவளுக்கு அப்பா, அம்மா எல்லாரும் இருந்தும் அனாதை போல தான் இங்கு இருக்கிறார். அவரை பார்ப்பதற்கு யாருமே வர மாட்டாங்க. அங்கிருந்து இங்க வந்து ஒட்டிக்கிட்டு நம்ம குடும்பத்தை இப்படி பாடு படுத்திட்டு இருக்கா என்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: அந்த நேரம்,பார்த்து ஜனனியின் அம்மா பார்வதி வீட்டிற்குள் வருகிறாள். உடனே கரிகாலன் உங்களை பத்தி தான் பேசிக்கொண்டே இருந்தும் அதுக்குள்ள சரியான நேரத்தில வந்துட்டீங்களே என்கிறார். உடனே நந்தினி பார்வதி அம்மாவை வரவேற்க வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் எப்படி இருக்கிறார்கள் என பார்வதி நலம் விசாரிக்கிறார். அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் ஈஸ்வரி அக்கா ஹாஸ்பிடலுக்கு போய் இருக்காங்கா என சொல்கிறார். உடனே குணசேகரன் ஏன் நந்தினி அதோட நிறுத்திட்ட, அக்கா ஏன் ஹாஸ்பிடலுக்கு போயிருக்கானு சொல்ல வேண்டியது தானே அப்பதானே மகளை பெத்த வயிறு குளுகுளுன்னு இருக்கும் என சொல்கிறார்கள்.
கண்கலங்கும் ஜனனி: இப்படி பேசிக்கொண்டு இருக்கும்போது விசாலாட்சி வெளியில் வந்து விட இங்கே எதற்காக பேசிக் கொண்டு இருக்க பார்வதி, வா வந்து ஜனனியை பாரு என சொல்லி மேலே அழைத்து செல்கிறார். அப்போது ஜனனியை பார்த்து கட்டி பிடித்து கண் கலங்குகிறார். உடனே பார்வதி எதற்காக அழுற ஜனனி, இதற்கு மேல் தான் நீ தைரியமாக இருக்கணும் வாழ்க்கையில சின்ன வயசுல இருந்து நீ நிறைய கஷ்டங்களை பட்டுட்ட அடுத்தவங்களுக்காகவே நீ கஷ்டப்பட்டு கொண்டே இருக்கிற. இனிமேலாவது உனக்காக வாழு உன் கூட சக்தி ஆதரவா இருக்காரு அவருக்காக நீ வாழ வேண்டும் என்றார்.

என்னால் வர முடியாது: மேலும், ஜனனியின் வயிற்றில் வளரும் குழந்தைக்காகத் தான் பார்த்துப் பார்த்து வாங்கி வந்த தின்பண்டங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் அனைத்தையும் ஜனனியிடம் கொடுக்கிறார். நம்ம வீட்டில் இருக்கும் சூழ்நிலைக்கு உன் டெலிவரிக்கு என்னால் இங்கே வர முடியுமான்னு தெரியல ஜனனி! அதனால் நீ இங்கேயே இருந்து பத்திரமாக டெலிவரி பார்த்துக்கோ எனப் பார்வதி சொல்ல ஜனனி வருத்தப்படுகிறாள். இதையடுத்து இனி என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications