காணாமல் போன விக்கியின் உடல்.. நடுநடுங்கிப் போன ராணா.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: மருத்துவமனையில் இருக்கும் சக்திக்கு போலீசார் வீட்டுக்கு வந்திருப்பதாக தகவல் வருவதை அடுத்து, சக்தி, ஜனனி மற்றும் விசாலாட்சி மூவரும் வீட்டுக்கு வருகிறார்கள். ஜனனியை பார்த்த இன்ஸ்பெக்டர், யாரை கேட்டு வெளியில் போனீங்க என கேட்கிறார். அதற்கு சக்தி, நாங்கள் ஊரை விட்டு ஓடிப்போகவில்லை. மருத்துவமனைக்குத் தான் சென்றிருந்தோம் அதற்கு கூட உங்களிடம் பர்மிஷன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்கிறார். உடனே இன்ஸ்பெக்டர் எதற்காக மருத்துவமனைக்கு போனீங்க என்று கேட்க, விசாலாட்சி கோபத்துடன், அதை உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்கிறார். அப்போது ஜனனி, நான் கர்ப்பமாக இருக்கிறேன். அதற்காக செக்கப்பிற்கு மருத்துவமனைக்கு சென்றிருந்தோம் என்கிறார். இதைக் கேட்ட இன்ஸ்பெக்டர், கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் தானா தர்ஷினியை கடத்தி வைத்து இப்படிப்பட்ட மோசமான வேலையை செய்தீங்க என்று ஜனனியை அவமானப்படுத்தும் விதமாக கேள்வி கேட்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதனால் ஆத்திரப்படும் சக்தி, சார் நீங்க ஒருதலைபட்சமாக விசாரணை நடத்துகிறார்கள். நாங்க ஏற்கனவே இந்த ராணா மீது சந்தேகம் இருப்பதாக சொல்லி இருக்கிறோம் அப்படி இருக்கும் போது நீங்க அவரிடம் விசாரணை நடத்தாமல், எங்களிடம் விசாரிப்பது சரி இல்லை என்கிறார். அப்போது இன்ஸ்பெக்டர் ராணா சாதாரணமான ஆள் இல்லை. அவர் ஒரு கோடிஸ்வரர் அப்படி இருக்கும் போது, அவர் உங்களுக்கு உதவி செய்வதே பெரிய விஷயம் என்கிறார். உடனே சக்தி அதைத்தான் நானும் கேட்கிறேன். எதற்காக கோடிஸ்வரன் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும், உண்மை வெளியில் வரவேண்டும் என்றால் அவரிடம் நீங்க விசாரிக்க வேண்டும் என்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

காணாமல் போன விக்கி உடல்: உடனே போலீசார் சிறுமலையில் விக்கியை சுட்ட இடத்தை காட்டும்படி சொல்ல, சக்தி, ஜனனி இருவரையும் அழைத்து செல்கின்றனர். ஆனால், ஜனனி, விக்கியை யாரோ சுட்டார்கள் அது யார் என்று எங்களுக்கு தெரியாது என்று சொல்கிறார். இருந்தாலும் இன்ஸ்பெக்டர் அந்த இடத்தை காட்டும்படி கூறியதால், இருவரும் அந்த இடத்திற்கு செல்கின்றனர். ஆனால், அந்த இடத்தில் விக்கியின் உடல் இல்லை. உடனே போலீசார் எங்கே விக்கியின் உடல் என்று ஜனனியிடம் கேட்க அதை ஏன் சார் உங்களிடம் கேட்குறீங்க, அதை நீங்க தான் கண்டுபிடிக்க வேண்டும், முதலில் உங்களை குற்றவாளி போல நினைத்து விசாரிக்காமல் விசாரணையை வேறு விதத்தில் மாற்றுங்கள் என சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

கடும் கோவத்தில் ராணா: இந்த விஷயத்தை இன்ஸ்பெக்டர் ராணாவிற்கு போன் செய்து, நீங்க சொன்ன இடத்தில் விக்கியின் உடல் இல்லை என்று சொல்கிறார். மேலும், அந்த விஷயத்தில் இதற்கு மேல் என்னால் எதுவும் செய்யமுடியாது, நீங்க வேறு ஆளை பார்த்துக்கோங்க சார் என்கிறார். இதைக்கேட்டு ஆத்திரப்படும் ராணா, ஆத்திரத்தில் கத்திவிட்டு லட்சுமணை வண்டியை எடுக்க சொல்கிறார். மேலும், விக்கியின் உடல் எங்கே போய் இருக்கும், அந்த உடல் மட்டும் வேறு யார் கையிலாவது கிடைத்துவிட்டால் பெரிய பிரச்சனையாகி விடும் என கோவத்தில் கத்துகிறான். மறுபக்கம் ஜனனி, சக்தி இருவரும் குணசேகரன் வீட்டிற்கு வருகின்றனர். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X