குணசேகரனை வாயடைக்க வைத்த ரேணுகா-நந்தினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அதிரடி ட்விஸ்ட்!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோடின் தொடக்கத்தில், குணசேகரன் ராவணனிடம் பிசினஸ் பொறுப்பை ஒப்படைப்பதாகக் கூறுகிறார். இதைக் கேட்டு அதிருப்தி அடையும் நந்தினி மற்றும் ரேணுகா இருவரும், இதில் எங்களுக்குக் கொஞ்சம் கூட விருப்பமில்லை என முகத்திலடித்தாற்போல் சொல்கின்றனர். ஈஸ்வரியும், எப்போது எதற்கு இதையெல்லாம் பேச வேண்டும்? இது தேவையில்லாத வேலை, பிறகு பார்த்துக் கொள்ளலாம் என ராவணனை ஓரங்கட்டுகிறாள். இதனால் பயங்கர ஆத்திரமடைந்த ராவணன், தனது பிஏ லட்சுமணனிடம், அந்தக் குடும்பத்தையும், அதில் இருப்பவர்களையும் ஒவ்வொருவராகத் தனித்தனியாகப் பிரித்து அந்த வம்சத்தையே நிர்மூலமாக்குவேன். அதன் பிறகுதான் குணசேகரன் முன்னாடி போய் நின்னு நான் யார் என்கிற உண்மையைச் சொல்வேன் என்கிறான்.

கதிர், ஞானத்திற்கு அட்வைஸ்: மறுபக்கம், நந்தினியும் ரேணுகாவும் கதிர் மற்றும் ஞானத்தை அழைத்து பேசுகின்றனர். அப்போது, நந்தினி, "யார் இந்த ராவணன்? அவனைப் பார்த்தால் நல்லவன் போல தெரியவில்லை. அவனுக்கு அவ்வளவு சொத்துக்கள் இருக்கும்போது அவன் ஏன் நம்முடைய பிசினஸை கவனிக்கணும்? உங்களுக்கு ஒரு வேலை தெரியும்னா அதை நீங்களே செய்யுங்க, அவன் மூலமா செய்ய எனக்கு விருப்பமில்லை என்கிறாள். அதைத்தொடர்ந்து பேசிய ரேணுகா, ஞானத்திடம், இதற்கு முன் கரிகாலனை நம்பி அந்த கருவாட்டுக்கடை பிசினஸை ஆரம்பிச்சாங்க.. கடைசியில என்ன ஆச்சு? பிசினஸ் ஆரம்பிக்கிறதுங்கிறது லேப்டாப்பை பார்த்து முடிவு பண்ற வேலை இல்லை. முதல்ல அக்கவுண்ட் தொடங்கணும், பெயர் வைக்கணும், ஜிஎஸ்டி எனப் பல வேலைகள் இருக்கு. அதையெல்லாம் விட்டுட்டு ராவணன் லேப்டாப்ல படத்தை போட்டு காட்டுறான், அத நீங்க நம்புறீங்க என வெளுத்து வாங்குகிறாள். அந்த நேரம் அங்கு வரும் ஈஸ்வரியும், இவர்கள் சொல்வதுதான் சரி, யோசித்து முடிவு செய்யுங்கள் என சப்போர்ட் செய்கிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

அப்செட்டான குணசேகரன்: ஹாலில் அனைவரும் இருக்கும்போது அங்கு வரும் குணசேகரன், எல்லாரும் ஏன் இங்க இருக்கீங்க? என்ன விஷயம் என கேட்கிறார். அப்போது கதிர், இந்த ராவணன் பிசினஸில் தலையிடுவது வீட்டில் இருக்கும் யாருக்கும் பிடிக்கவில்லை என்கிறான். உடனே ரேணுகா மிகவும் தெள்ளத் தெளிவாக குணசேகரனிடம் பேசுகிறாள், ராவணன் இதற்கு மேல் இதில் தலையிடக்கூடாது. என்ன பிசினஸ் ஆக இருந்தாலும் இவர்களே பார்த்துக் கொள்ள வேண்டும். ராவணன் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை என உறுதியாகச் சொல்கிறாள்.

நந்தினியின் பெயரில் பிஸ்னஸ்: இதைக் கேட்டு குணசேகரன், உங்க முடிவு இதுவா இருந்தா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. அந்த ராவணன் தம்பியும் எனக்கு இந்த பொறுப்பு வேண்டாம்னு சொல்லிட்டான். நீங்களே பார்த்துக்கோங்க எனக் கூறிவிட்டு, முதலில் இந்த பிசினஸ்க்கு என்ன பெயர் வைக்கப் போறீங்க? எனக் கேட்கிறார். அப்போது கதிர், நீங்க கோபித்துக்கொள்ளவில்லை என்றால் ஒரு விஷயம்.. இந்த பிசினஸிற்கு என்னுடைய மனைவி 'நந்தினி'யின் பெயரை வைக்கப்போகிறேன் என்று சொல்ல, இதைக் கேட்டு குணசேகரன் செம அப்செட் ஆகிறார். ஆனால், அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் நிற்கிறார். இத்துடன் இன்றைய விறுவிறுப்பான எபிசோடு நிறைவடைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X