குணசேகரனுக்கு நேர்ந்த ஆபத்து.. கதிர் சட்டையை பிடித்து உலுக்கிய அறிவுகரசி.. எதிர்நீச்சல் தொடர்கிறது
சென்னை: குணசேகரன் சென்ற காரில் இருந்து டிரைவர் திடீரென இறங்கி விட்டு அங்கிருந்து ஓடிவிடுகிறார். அதே நேரல் ஏசியில் இருந்து ஏதோ புகை வந்ததால், குணசேகரன் அப்படியே சரிந்து விடுகிறார். இதற்கிடையில் தர்ஷினியை தேடும் முயற்சியில் அருந்ததி மற்றும் ஜனனி காட்டுப்பகுதியில் தேடி வருகின்றனர்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில் வெளியே போன குணசேகரன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் ஞானமும் கதிரும் கவலையுடன் இருக்கின்றனர். அப்போது அறிவுக்கரசிக்கு அப்பா இறந்துவிட்டதாக செய்தி வருகிது. இதனால், துடித்துப்போன அறிவுக்கரசி இறுதிச் சடங்குக்கு வருமாறு கதிரை அழைக்கிறாள். ஆனால், கதிர் எங்க வீட்டிலேயே ஆயிரம் பிரச்சனை இருக்கு தர்ஷனி காணாமல் போயிருக்கா, சூழ்நிலையில் தாங்கள் எப்படி வந்து துக்கம் அனுசரிக்க முடியும் என்று கதிர் என ஆவேசமாக பேசுகிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதனால் கோபமடைந்த அறிவுக்கரசி, உங்க குடும்பத்தோட புத்தியே இது தான். சுயநலமானவர்கள். எங்க அப்பாவோட கடைசி ஆசையே தங்கச்சிக்கு கல்யாணத்தை செய்து வைப்பது தான். உங்களால் அது கூட நடக்காமே போச்சு என்று கதறி அழுகிறாள். இதைப்பார்த்து ஆத்திரப்படும் கதிர், இங்கே இருந்து எதுக்கு அழுதுக்கிட்டு இருக்க என்று சொல்ல மேலும் ஆத்திரப்படும் அறிவுக்கரசி கதிரின் சட்டையை பிடித்து சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு கிளம்புகிறாள்.
தப்பிய குணசேகரன்:அதன் பின் வீட்டுக்கு வரும் குணசேகரிடம் ,கதிர் ஞானம் இருவரும் என்ன ஆச்சு அண்ணா, ஏன் போனை எடுக்கவில்லை என்று கேட்க, குணசேகரன் காரில் நடந்த சம்பவத்தை சொல்கிறார். அதுமட்டுமல்லாமல், இதற்குப் பின்னால் பெரிய சதி இருக்கு, அந்த டிரைவர் வெறும் அம்பு தான், இதெல்லாம் அந்த ஜனனி செய்யும் வேலை என சொல்கிறார். இதை கேட்டு ஈஸ்வரி, விசாலாட்சி அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
மறுபுறம், சிறுமலை கிராமத்தில் தர்ஷினியை தேடி ஜனனியும் அருந்ததியும் அலைகின்றனர். அதே நேரத்தில், தர்ஷினியும் சுவாமிநாதனும் ஒரு கட்டப்படாத வீட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருக்கும் இடத்திற்கு மிக அருகில் ஜனனியும் அருந்ததியும் வந்துவிடுகின்றனர். தர்ஷினியை அவர்கள் கண்டுபிடிப்பார்களா? அல்லது வாய்ப்பு நழுவிப்போகுமா? என்ற பரபரப்பான எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications