குணசேகரனை வீழ்த்த ராணா போட்ட ‘ஸ்கெட்ச்’.. கதிரின் நியாயமான சந்தேகம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடில் வீட்டிற்கு வரும் ராணா, குணசேகரன் மீது மிகுந்த பாசமும் மரியாதையும் கொண்டவரைப் போல நடந்து கொள்கிறார். அதே போல குணசேகரனும் ராணாவை தனது சொந்த தம்பியைப் போல நினைத்து உருக்கமாக பேசுகிறார். இந்த நெருக்கத்தை பார்த்த கதிர் மற்றும் ஞானம் இருவரும் கடும் எரிச்சலடைகின்றனர். அப்போது ராணா, இந்த சாப்பாட்டின் மீது சத்தியமாக சொல்கிறேன் தர்ஷினியை கண்டுபிடித்து உங்களிடம் சேர்ப்பேன் என்று சொல்ல ஈஸ்வரி, விசாலாட்சி இருவரும் கண்கலங்குகின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து வெளியே வரும் ராணா, குணசேகரிடம் இந்த வழக்கிலிருந்து உங்களை வெளியே கொண்டு வருவதும் என்னுடைய பொறுப்பு என்கிறா.அதோடு மட்டுமில்லாமல், தற்போதைய வழக்கறிஞரை மாற்ற வேண்டும் என்கிறார். இதைக் கேட்ட கதிர், எங்களுக்காக பல வருடங்களாக ஆஜராகும் நல்ல வழக்கறிஞர் அவர். இந்த விஷயத்தில் நீங்கள் தலையிட வேண்டாம் என்கிறார். ஆனால் குணசேகரன், தம்பி நல்லாதுக்கு தானே சொல்லுது அதை செய்தால் என்ன என்கிறார். மேலும், தம்பி நீங்களே நல்ல வழக்கறிஞரை சொல்லுங்கள் என்று ராணாவுக்கு ஆதரவாக பேசுகிறார். இதைக் கேட்டு கதிர், ஞானம் இருவரும் அதிர்ச்சியடைகின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

விரக்தியில் ஜனனி: மறுபக்கம் சிறுமலையில் தர்ஷினியை தேடி அலைந்தும் எந்த தகவலும் கிடைக்காததால் ஜனனி விரக்தியடைகிறார். இதுக்கு மேல நாம என்ன செய்ய வேண்டும், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று கதவைத் தட்டி தேட வேண்டுமா? என்று வேதனையுடன் கேட்கிறார். அதற்கு அருந்ததி, இங்குள்ள அனைவரும் நல்லவர்கள் அல்ல, நாம அப்படி எல்லாம் தேட முடியாது ஜனனி, நாம இருட்டும் வரை காத்து இருக்கலாம். இருட்டிய பிறகு நான் முதலில் சொல்கிறேன் என்று சொன்னதும். ஜனனி, நானும் வருவேன் என்கிறாள்.
அதற்கு அருந்ததி, நீங்க இப்போது இரண்டு உயிராக இருக்கிறீர்க, உங்கள் குழந்தையின் பாதுகாப்பையும் நினைக்க வேண்டும் என்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

கதிருக்கு வந்த சந்தேகம்: மறுபக்கம், குணசேகரன் தனது தம்பிகளுடன் பேசும்போது, இந்த பையன் ரொம்ப பணக்காரன் அதை எல்லாம் வெளியில் காட்டிக்காமல் ரொம்ப பண்பாக நடந்து கொள்கிறான். அன்னைக்கு மட்டும் அவன் வந்து என்னை காப்பாற்ற வில்லை என்றால், இந்நேரம் நான் உயிரோடு இருந்து இருக்க மாட்டேன் என்று சொல்கிறார். உடனே கதிர், அவன் பேச்சு, நடந்தை எதுவுமே உண்மையா இல்ல, நீங்க யாரையும் சாதாரணமாக நம்ப மாட்டீர்கள். ஆனால் ராணாவின் பேச்சும் நடவடிக்கையும் பார்த்தால் ஏதோ ஒரு பெரிய விஷயம் பின்னணியில் இருப்பது போல தெரிகிறது"என்கிறார். உடனே குணசேகரன், என்ன கதிர் நமக்கு உதவி செய்தவனை சந்தேகப்படலாமா....ராணா சொன்னபடி நான் வழக்கறிஞரை மாற்றப்போகிறேன் என்கிறார். இதைக் கேட்ட கதில் தப்பு பண்றீங்க அண்ணன் என்று சொல்ல, அவன் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று உறுதியாக கூறுகிறார். குணசேகரனின் இந்த பதில் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. குணசேரனனின் குடும்பத்தை அழிக்க வரும் ராணாவின் திட்டம் என்ன என்ற பரபரப்புடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X