ஜனனியை சிக்க வைக்க ராணா வீசிய.. குணசேகரன் சூழ்ந்த துரோகம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடில் குணசேகரன் மீது ராணா காட்டும் அளவுக்கு மீறிய உரிமையும் நெருக்கமும் கதிர், ஞானம் இருவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குடும்பத்தில் நடந்த அனைத்து விஷயங்களும் ராணாவுக்கு எப்படி தெரிகிறது? இதன் பின்னால் ஏதோ பெரிய மர்மம் இருக்கிறது என இருவரும் குணசேகரனிடம் எச்சரிக்கின்றனர். ஆனால் குணசேகரன், அவனிடம் இல்லாத சொத்தா, பணமா என்றே நான் அவனுக்கு செய்த உதவி, இன்று விதையாக முளைத்து உதவி செய்ய வந்து இருக்கு, ராணாவை நான் முழுமையாக நம்புகிறேன். தர்ஷினியை வீட்டிற்கு மீண்டும் அழைத்து வரப்போவது அவன்தான். இனிமேல் ராணாவைப் பற்றி யாரும் தவறாக பேசக்கூடாது என கண்டிப்பாக சொல்கிறார். இதைக் கேட்டு கதிர் மற்றும் ஞானம் இருவரும் கவலைப்படுகின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் சிறுமலை கிராமத்தில் தர்ஷினியை தேடும் பணியில் ஜனனி மற்றும் அருந்ததி தொடர்ந்து ஈடுபடுகின்றனர். இரவு முழுவதும் தேடியும் எந்த தகவலும் கிடைக்காததால் ஜனனி விரக்தியடைகிறார். அப்போது மீண்டும் ஒரு கட்டிடத்திற்குள் சென்று பார்க்கும்போது, அங்கு தர்ஷினியின் கம்பள் கிடைப்பதை பார்த்து ஜனனி கதறி அழுகிறார். தர்ஷினி இங்குதான் இருந்திருக்கிறாள், நான் அதை கவனிக்காமல் விட்டுவிட்டேனே என கதறி அழுகிறாள். அப்போது அருந்ததி, நாம் தர்ஷினியை தேடி வந்தது கடத்தல்காரர்களுக்கு தெரிந்துவிட்டது. அதனால்தான் தர்ஷினியை வேறு இடத்திற்கு மாற்றியிருக்கிறார்கள். இனி இங்கே நேரத்தை வீணாக்காமல் வேறு இடத்தில் தேடலாம் என்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

தர்ஷினியை இடம் மாற்றிவிட்டேன்: இதற்கிடையில், காரில் ராணா வந்து கொண்டு இருக்கும் போது, தர்ஷினியை கடத்தி வைத்திருக்கும் நபரிடமிருந்து போன் வருகிறது. தர்ஷினியை தேடி இரண்டு பெண்கள் வந்ததால், எனக்கு சந்தேகம் வந்து தர்ஷினியை வேறு இடத்திற்கு மாற்றிவிட்டதாக அவர் கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் ராணா, அவர்களின் புகைப்படங்களை அனுப்பச் சொல்லுகிறார். மேலும், நான் சொல்வதுவரை தர்ஷினி பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஆனால் அவளை தேடி யார் வந்தாலும் அவர்களின் கதையை அங்கேயே முடித்துவிடு என்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

ராணாவின் பிளான்: இதையடுத்து நேராக குணசேகரன் வீட்டிற்கு வரும் ராணா, தர்ஷினி தற்போது சிறுமலையில் இருக்கிறாள். இன்னும் சில நிமிடங்களில் அவள் இருக்கும் சரியான இடம் எனக்கு தெரிந்துவிடும் என்கிறார். அதோடு நின்றுவிடாமல், தர்ஷினியை கடத்திச் சென்றது ஜனனிதான் என்று ஒரு பெரும் குண்டை தூக்கிப் போடுகிறார். ராணாவின் சொன்னதை கேட்டு குணசேகரன் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். ராணா சொல்வது உண்மையா? அல்லது ஜனனியை சிக்கவைக்க திட்டமிட்ட பொய்யா? என்ற பரபரப்புடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X