சுவாமிநாதனின் மரண வாக்குமூலம்.. உயிரை காப்பாற்ற போராடும் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது இப்போது கிளைமாக்ஸை நோக்கி நகர்கிறதா என்று கேட்கும் அளவிற்கு, ஒவ்வொரு எபிசோடிலும் ட்விஸ்டுக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கிது. நேற்றைய எபிசோடில் தர்ஷினியைக் காப்பாற்ற ஜனனி மற்றும் அருந்ததி அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கின்றனர்.

சிறுமலையில் கடத்தி வைக்கப்பட்டிருந்த தர்ஷினியும் சுவாமிநாதனும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்ய, அங்கு காவலுக்கு இருந்த ரவுடிகளுடன் பயங்கர தள்ளுமுள்ளு சண்டை நடக்கிறது. தர்ஷினி ஆபத்தில் இருக்கும் அந்தச் சரியான நேரத்தில், மாஸாக என்ட்ரி கொடுக்கும் ஜனனியும் அருந்ததியும், அங்கிருந்த ரவுடிகளை அடித்துத் துவம்சம் செய்துவிட்டு, காயங்களுடன் இருந்த தர்ஷினியையும் சுவாமிநாதனையும் பத்திரமாக காரில் ஏற்றி அங்கிருந்து காப்பாற்றி தப்பிக்கின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: விஷயம் கைமீறிப் போனதை உணர்ந்த அங்கிருந்த ரவுடி, உடனடியாக வில்லன் ராணாவுக்குப் போன் போட்டு, ஜனனியும் அருந்ததியும் வந்து ரெண்டு பேரையும் தூக்கிட்டுப் போயிட்டாங்க என்ற அதிர்ச்சித் தகவலைச் சொல்கிறான். இதைக் கேட்டு ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற ராணா, உடனடியாகத் தனது அடுத்து வேறொரு ரவுடிக்கு போன் செய்து, ஜனனி டீமின் புகைப்படங்களை அனுப்பி, இதுல தர்ஷினியைத் தவிர மற்ற எல்லாரையும் ஸ்பாட்லயே சுட்டுக் கொன்னுடு என உத்தரவுடுகிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

ஆத்திரத்தில் கத்திய கதிர்: மறுபக்கம், காரியமெல்லாம் கச்சிதமாக நடப்பது போல வெளியில் காட்டிக் கொள்ளும் ராணா, எதுவும் தெரியாதது போல குணசேகரன் வீட்டுக்குள் வந்து அமர்கிறார். அப்போது அவருக்கும் கதிருக்கும் இடையே பயங்கர சண்டை வெடிக்கிறது. ராணா கோபமாக, நான் எல்லா விஷயத்தையும் பார்த்துக்கிறேன், இதுல யாரும் தலையிட வேண்டாம் என்று சொல்ல, குணசேகரன் கதிரை வெளுத்து வாங்குகிறார். யாரோ ஒருத்தர் நமக்காக உதவி செய்ய வராங்க, அதுலயும் நீ இப்படித்தான் வம்பு பண்ணுவியா? என்று கதிரை அடக்குகிறார் குணசேகரன். ஈஸ்வரியும் கண்ணீர் மல்க ராணாவிடம், எப்படியாவது என் மகளை என்கிட்ட பத்திரமா கொண்டு வந்து சேர்த்திடுங்க என்று கெஞ்சுகிறார்.\ குணசேகரன் தன்னை வாயே பேசக்கூடாது என்று மிரட்டுவதால் ஆத்திரமடையும் கதிர், இத்தனை வருஷமா உங்க கூடவே இருந்த எனக்கு மரியாதை இல்லை... இன்னைக்கு வந்தவன் உங்களுக்குப் பெருசா போயிட்டானா? என்று அண்ணனிடமே கோபமாக எகிறுகிறார். இதனால் குணசேகரன் குடும்பத்திற்குள் புதிய விரிசல் விழத் தொடங்கியுள்ளது.

மரண வாக்குமூலம்: குணசேகரன் வீட்டில் சண்டை நடந்து கொண்டிருக்க, அங்கே மலையிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கும் ஜனனி டீமை ராணாவின் ஆட்கள் சுற்றி வளைக்கிறார்கள். ராணா சொன்னபடியே, அந்த ரவுடி துப்பாக்கியால் சுவாமிநாதனை நோக்கிச் சுட, குண்டு பாய்ந்து நிலை குலைந்து சரிந்து விழுகிறான் சுவாமிநாதன். எப்படியாவது அவனைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று பதறியபடி ஜனனி டீம் அவனை காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்கின்றனர். ஆனால், போகும் வழியிலேயே தன் இறுதி மூச்சு பிரிவதை உணர்ந்த சுவாமிநாதன், அக்கா... இதுக்கு மேல நான் பிழைக்க மாட்டேன், தயவுசெஞ்சு நான் சொல்றதை வீடியோ எடுத்துக்கோங்க என்கிறான். அந்த மரண வாக்குமூல வீடியோவில், இந்தக் கடத்தலுக்கும் ஜனனி அக்காவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. நான் ஹாஸ்டல்ல இருக்கும்போது ரவுடிங்க ரெண்டு பேர் என்கிட்ட வந்து மிரட்டிப் பேசிதான் தர்ஷனியை கடத்துனாங்க. ஜனனி அக்காவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை சொல்லிவிட்டு ஜனனியின் மடியிலேயே அவன் உயிர் பிரிகிறது. சுவாமிநாதனின் இந்த கொடூர மரணமும், தர்ஷனியை நிலைகுலைய செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X