ஜனனி தீவிரவாதியா? ராணா போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. ஹாஸ்பிட்டலில் இருந்து தப்பிய தர்ஷினி டீம்!
சென்னை: எதிர்நீச்சல் தொடரில் நேற்றைய துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, இன்றைய எபிசோட் முழுக்க முழுக்க ரத்தமும் சதையுமான அதிரடித் திருப்பங்களுடன் நகர்ந்து, ரவுடிகளால் துப்பாக்கியால் சுடப்பட்ட சுவாமிநாதனை, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜனனியும் அருந்ததியும் காரில் ஏற்றி அவசரமாக மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். ஆனால், மருத்துவர்கள் சுவாமிநாதன் இறந்துவிட்டார் என்று சொல்கிறார். இதைக் கேட்டதும் தர்ஷினி, ஜனனி, அருந்ததி என மொத்தப் பேருமே நிலைகுலைந்து, கதறி அழுகிறார்கள்.
இன்னொரு பக்கம், குண்டடி பட்டு ஒரு பையன் அட்மிட் ஆகி இறந்த விஷயத்தை, மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக போலீசுக்குத் தெரிவிக்கிறது. ஸ்பாட்டுக்கு வந்து விசாரிக்கும் போலீசாரிடம் ஜனனி, எங்க வீட்டுப் பொண்ணு தர்ஷினியையும், இந்த பையனையும் ஒரு கும்பல் கடத்திட்டுப் போனாங்க. நாங்க அவங்ககிட்ட இருந்து இவங்களைக் காப்பாற்றி கூட்டிட்டு வரும்போது, ஒரு ரவுடி கும்பல் இவனைத் துப்பாக்கியால் சுட்டுட்டாங்க என்று நடந்த உண்மையை அப்படியே சொல்கிறாள். ஆனால், அந்த போலீஸ்காரரோ, நீங்க சொல்றதெல்லாம் நம்புற மாதிரியே இல்லையே... என்ன புதுசு புதுசா கதை சொல்றீங்க? என்று ஜனனியை குற்றவாளி போலப் பேசி மிரட்டுகிறார்.

ராணாவின் மாஸ்டர் பிளான்: போலீஸ் விசாரித்துக் கொண்டிருக்கும் போதே, இன்ஸ்பெக்டருக்கு ஒரு போன் கால் வர, அவர் பேசுவதற்காகப் பதற்றத்துடன் வெளியே வருகிறார். இதைப் பார்த்த அருந்ததி, போலீஸோட நடவடிக்கைகள் எதுவுமே சரியில்லை ஜனனி, இவங்க எப்படி வேணாலும் கேஸை மாத்துவாங்க என்று எச்சரிக்கிறாள். அருந்ததி நினைத்தபடியே, போலீசுக்கு போன் செய்தது ராணா தான். அந்த தர்ஷினியைத் தவிர, மத்த எல்லாரையும் பிடிச்சு உள்ளே போடுங்க... அவங்களுக்கு எதிரான ஆதாரங்கள் எல்லாத்தையும் நான் தர்றேன் என்றார்.

தீவிரவாதி ஜனனி?: ராணாவின் உத்தரவின்படி, ஜனனியையும் அருந்ததியையும் கைது செய்யப் போலீஸ் உள்ளே வருவதற்குள், உஷாரான மொத்தப் பேருமே அங்கிருந்து ரகசியமாகத் தப்பித்து விடுகிறார்கள். தப்பித்துச் சென்று ஒரு பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் அடையும் அந்த நேரத்தில் தான், டிவியில் அந்த அதிரடி பிரேக்கிங் நியூஸ் ஓடுகிறது. ஜனனிக்குத் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு... தர்ஷினியைக் கடத்தி வைத்திருக்கும் தீவிரவாதி ஜனனி என்று ஊடகங்களில் செய்தி பரப்பப்படுகிறது. இதைப் பார்த்து ஜனனி, அருந்ததி, தர்ஷினி என அனைவருமே அதிர்ச்சியில் உறைகிறார்கள். நம்மைக் காப்பாற்ற வந்த ஜனனி சித்தியை தீவிரவாதியாக்குகிறார்களே என்று தர்ஷினி கலங்குகிறாள்.
சக்திக்கு அழைப்பு : தன்னைச் சுற்றி நடக்கும் இந்தச் சதிவலைக்குக் பின்னால் யார் இருக்கிறார்கள்? குணசேகரன் வீட்டில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பதைத் தெரிந்துகொள்ள முடிவெடுக்கும், ஜனனி, தனது கணவர் சக்திக்கு ஃபோன் செய்து, சக்தி... நான் இப்போதைக்கு ஒரு இடத்துல சேஃபா தான் இருக்கேன். ஆனா என்னைச் சுத்தி ஒரு மிகப்பெரிய ட்ராப் போயிட்டே இருக்கு. அது என்னன்னு எனக்குத் தெரியணும். முதல்ல வீட்ல என்ன நடக்குது, யாரு இந்த கேஸ் எல்லாம் ஃபைல் பண்றதுங்கிற விஷயத்தை எனக்கு உடனே கண்டுபிடிச்சு சொல்லு என்று பதற்றத்துடன் கூறுகிறாள்.ஜனனியின் குரலைக் கேட்டுப் பதறிய சக்தி, உடனடியாக குணசேகரன் வீட்டிற்குள் நுழைந்து உளவு பார்க்கக் கிளம்புகிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை நாளை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications