சக்திக்கு தெரிந்த ரகசியம் என்ன? கதிர், ஞானம் எடுத்த அதிரடி முடிவு.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில் சக்தியின் நடவடிக்கைகள் குடும்பத்தினரையே குழப்பத்தில் ஆழ்த்தின. ஜனனி போனில் தொடர்புகொண்டு வீட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொண்டு தனக்கு சொல்லும்படி சக்தியிடம் கூறுகிறார். அதன்படி வீட்டிற்கு வரும் சக்திக்கு, ராவணன் வீட்டில் தங்கி உதவி செய்து வருகிறார் என்ற தகவலை கரிகாலன் தெரிவிக்கிறார்.

இதையடுத்து ராவணனிடம் நேரடியாக பேசும் சக்தி, நீங்கள் யார்? பெரிய பணக்காரராக இருந்தும் எங்கள் குடும்பத்திற்கு ஏன் இவ்வளவு உதவி செய்கிறீர்கள்? என்று கேட்டிகிறார். அதற்கு ராவணன் உங்க அண்ணன் செய்த உதவிக்கு தான் தற்போது நான் உதவி செய்கிறேன் என பதிலளிக்கிறார். ஆனால் சக்தி விடாமல், ராமேஸ்வரத்தில் தன்னை தாக்க வந்தவர்களிடமிருந்து காப்பாற்றியது நீங்க தானே என்று கேட்கிறார். அதற்கு ராவணன் அதை மறுத்து, எனக்கு உங்க அண்ணனை மட்டும் தான் தெரியும் என்கிறார்

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: சக்தியின் இப்படி பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த கதிர், தர்ஷினியை காப்பாற்றவே ராவணன் வந்திருக்கிறார், அவரிடம் இப்படி பேசுவது சரியல்ல என்று கூறுகிறார். ஆனால் சக்தி, தர்ஷினியையும் தனது மனைவியையும் எப்படி மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்பது தனக்குத் தெரியும் நீங்க இங்கே எந்த உதவியும் செய்யத் தேவையில்லை என்கிறார். உடனே ஈஸ்வரி என்னது தர்ஷினி இருக்கும் இடம் உனக்கு தெரியுமா என்று கேட்க, சக்தி நேரடியான பதில் சொல்லாமல், சரியான நேரத்தில் அவளை கொண்டு வருவேன் என்கிறார். இதற்கிடையில் ராவணன், உங்கள் குடும்பத்தில் ஏற்கனவே நிறைய பிரச்சினைகள் இருக்கு, என்னால் மேலும் பிரச்சினை வர வேண்டாம், நான் வெளியே போகிறேன் என்கிறாத். ஆனால் கதிர் அவரை தடுத்து நிறுத்தி, இப்போது தர்ஷினியை காப்பாற்ற அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டிய நேரம் என்று கூறுகிறார். இதனால் ராவணன், ஞானம், கதிர் ஆகியோர் ஒரே அணியாக செயல்பட முடிவு செய்கிறார்கள்.

அருந்ததி சொன்ன விஷயம்: மறுபக்கம் சிறுமலை கிராமத்தில், டிரைவர் இன்னும் திரும்பி வரவில்லை, அவர் ஏதோ சிக்கலில் மாட்டியிருக்கிறார் என்று அருந்ததி சந்தேகப்படுகிறார். இதுக்கு மேல நாம ஒன்னா சேர்ந்து இருக்க முடியாது, நீங்களும் தர்ஷினியும் அங்கிருந்து கிளம்பிவிடுங்கள் நான் தனியாக செல்கிறேன். நமக்கு அந்த வீடியோ ஆதாரம் ரொம்ப முக்கியம், அந்த வீடியோகை பத்திரமாக நீங்க சொன்ன நீதிபதிக்கு அனுப்பி விடுங்கள் என்கிறார். ஜனனியும் அதற்கு சம்மதித்து, இதுவரை உதவி செய்ததற்கு நன்றி தெரிவிக்கிறார்.

நடக்கப்போவது என்ன: குணசேரகரன் வீட்டை விட்டு வெளியே வரும்ராவணன், சக்தியை சாதாரண மனிதராக நினைக்கக்கூடாது, அவனுக்கு பல உண்மைகள் தெரிந்திருக்கலாம் என்கிறார். அந்த நேரத்தில் இன்ஸ்பெக்டரிடமிருந்து அழைப்பு வருகிறது. சிறுமலை கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்திருப்பதாகவும், அவர் அளித்த தகவலின்படி சுவாமிநாதன் இறப்பதற்கு முன் மரண வாக்குமூலம் ஒன்றை வீடியோவாக பதிவு செய்திருப்பதாகவும் தெரியவருகிறது. அந்த வீடியோ நீதிபதியிடம் சென்றுவிட்டால் ஜனனி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் சிதறி போகும் அபாயம் இருப்பதாக இன்ஸ்பெக்டர் எச்சரிக்கிறார். இதனால் அந்த மரண வாக்குமூல வீடியோவை கைப்பற்றும் முயற்சியில் ராவணனும், மறுபுறம் உண்மையை வெளிக்கொணரும் முயற்சியில் ஜனனியும் ஈடுபட உள்ளனர். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X