Ethirneechal Thodargiradhu , Suntv, promo, எதிர்நீச்சல் தொடர்கிறது, சன் டிவி,

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இன்றைய எபிசோட் முழுக்க தர்ஷினி மற்றும் ஜனனியை சுற்றியே பரபரப்பாக நகர்கிறது. தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து எப்படியாவது சிக்னல் கிடைக்கும் பகுதிக்கு சென்று, சுவாமிநாதன் பேசிய வீடியோவை சக்திக்கு அனுப்ப வேண்டும் என்று ஜனனியும் தர்ஷினியும் முடிவு செய்கின்றனர். அதே நேரத்தில் அங்கு நடந்த அனைத்து விஷயங்களையும் சக்தியிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் இருவரும் பேசிக்கொள்கின்றனர்.

மறுபக்கம் குணசேகரன் வீட்டில் தர்ஷினியை தேடும் பணியில் ஞானம், கதிர் மற்றும் கரிகாலன் ஆகியோர் தீவிரமாக ஈடுபடுகின்றனர். ஜனனியை கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறிவிட்டு அனைவரும் வெளியே சென்ற நிலையில், வீட்டில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடக்கிறது. அதாவது ரேணுகாவின் அம்மா அலமேலு அம்மாளுக்கு திடீரென சாமி வந்து ஆக்ரோஷமாக ஆட ஆரம்பிக்கிறார். அந்த நேரத்தில் ராணா வீட்டுக்குள் வர, விசாலாட்சி பதற்றத்துடன் ஓடி சென்று, என் பேத்தி தர்ஷினி எங்கே இருக்கிறாள் என்று கேட்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: ராணாவை பார்த்தவுடன் அலமேலு அம்மாளின் ஆக்ரோஷம் மேலும் அதிகரிக்கிறது. இதனால் ராணாவைப் பற்றிய ஏதாவது முக்கியமான உண்மையை அவர் சொல்லப் போகிறார் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அலமேலு அம்மாள் திடீரென மயங்கி விழுந்துவிடுகிறார். பின்னர் அவரிடம் என்ன தெரிந்தது என்று குடும்பத்தினர் கேட்டபோது, தனக்கு தெளிவாக எதுவும் தெரியவில்லை. ஒரு கார் மற்றும் ஒரு காடு மட்டுமே கண்முன் தோன்றியதாகவும் கூறுகிறார்.

புதிய சிக்கல்: சாருபாலாவை சந்திக்கும் சக்தி, ஜனனி தன்னை தொடர்பு கொண்டது குறித்து சொல்கிறார். உடனே சாருபாலா, குணசேகரன் வழக்கில் தற்போது நிலைமை சாதகமாக இல்லை என்றும், முக்கிய சாட்சியாக இருந்த ஈஸ்வரி தனது நிலைப்பாட்டை மாற்றியதால் வழக்கில் புதிய சிக்கல் உருவாகி இருக்கு. குணசேகரனுக்கு எதிராக உண்மையை நிரூபிக்கக்கூடிய ஒரே நபர் தர்ஷினிதான். ஆனால் அவளும் தற்போது பிரச்சனையில் சிக்கியிருப்பதால், குணசேகரன் எளிதாக வழக்கிலிருந்து தப்பித்துவிட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதோடு ஜனனியே தர்ஷினியை கடத்தினார் என்றும், அவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பது பல செய்திகள் வந்து கொண்டு இருக்கு. இதனால் ஜனனியும் தர்ஷினியும் எப்படியாவது நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றார். இதைக் கேட்ட சக்தி, இருவரையும் பாதுகாப்பாக கோர்ட்டுக்கு அழைத்து வருவது தனது பொறுப்பு என்று உறுதியளிக்கிறார். இதனால் அடுத்த எபிசோடில் ஜனனியும் தர்ஷினியும் சக்தியை தொடர்பு கொள்கிறார்களா, சுவாமிநாதனின் வீடியோ ஆதாரம் வெளிவருகிறதா, குணசேகரனின் திட்டம் முறியடிக்கப்படுகிறதா என்பதை பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X