என் மகள பத்தி பேச நீ யார்? சக்தியை வெளுத்து வாங்கிய ஈஸ்வரி..எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஈஸ்வரியின் அப்பா ஜனனியை மோசமாக பேச ஆத்திரமடைந்த சக்தி, இதுக்கு மேல ஜனனி பற்றி ஏதாவது பேசுனீங்க என்றால் அவ்வளவு தான். மரியாதையா வீட்டை விட்டு வெளியே போங்க என கோவத்தில் கத்துகிறார். அப்போது ஈஸ்வரி, என் அப்பாவை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்லை, அவர் சொல்வதில் எந்தவிதமான தவறும் இல்லை அவர் உண்மையைத் தான் சொல்கிறார் என ஈஸ்வரி சொன்னதை கேட்டு ஜனனி கண்கலங்குகிறாள்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: அந்த நேரத்தில் தர்ஷினி நண்பரின் மாமா வீட்டிற்கு வந்து, சக்தியிடம் உங்களுடைய மகள் தர்ஷினியும் என்னுடைய மருமகனும் ஒன்றாக பழகி வந்தார்கள். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக அவனை காணவில்லை என்று கூறுகிறார். இந்த தகவலைக் கேட்டு ஈஸ்வரி மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். அவர் பேசியதை கேட்டு ஆத்திரமடையும் ஈஸ்வரி, சக்தியிடம், இந்த விஷயம் உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா? என்று கேட்கிறார். அதற்கு சக்தி "தெரியும்" என்று பதில் சொல்கிறார்.

தர்ஷினி எங்கே: இதனால் மேலும் கோபமடையும் ஈஸ்வரி, இந்த விஷயம் தெரிந்ததும் முதலில் என்னிடம்தானே இதைப் பற்றி சொல்லியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு எதற்காக என் மகளை பற்றி நீ விசாரிக்க வேண்டும்? என் மகளைப் பற்றி விசாரணை நடத்த நீங்க யார்?" என்று கேள்வி எழுப்புகிறார். உடனே ஜனனி, அய்யோ அக்கா, என்ன நடந்தது என்று முழுமையாக தெரியாமல் இருக்கும்போது எப்படி உங்களிடம் இதைப் பற்றி பேச முடியும்? என்று கூறுகிறார்.

சும்மா இருக்க மாட்டேன்: ஆனால் ஈஸ்வரி, என்னுடைய மகளுக்கு தேவையில்லாமல் முத்திரை குத்த வேண்டாம் அவ சின்ன பொண்ணு என சொல்கிறாள். அப்போது சக்தி, அந்த பையனின் அறையில் இருந்த பெட்டியில் தர்ஷினியும் அவனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ இருந்தது. அதனால்தான் நாங்கள் அவனிடம் விசாரணை நடத்தினோம் என்று விளக்குகிறார். ஆனால் அதையும் ஏற்க மறுக்கும் ஈஸ்வரி, தேவையில்லாமல் என் மகளைப் பற்றி நீங்கள் விசாரிக்க வேண்டாம். தயவுசெய்து இந்த விஷயத்தில் தலையிடாதீங்க, என்னுடைய மகளுக்கு ஏதாவது நடந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று எச்சரிக்கிறார்.


Click it and Unblock the Notifications