கதிர், ஞானத்தை பிரிக்க ராணா போட்ட மாஸ்டர் பிளான்.. சொத்துக்காக அண்ணனையே எதிர்க்கப் போகும் தம்பிகள்?

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் இன்றைய எபிசோடில் பரபரப்பான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ரேணுகாவின் தாயார் அலமேலு அம்மாளுக்கு சாமி வந்து அருள்வாக்கு கூறிய நிலையில், அவர் பாதியிலேயே நிறுத்தியதால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அலமேலு அம்மாள், இந்த வீட்டில் ஒரு தீய சக்தி இருக்கிறது. அது என்னை முழுமையாக அருள்வாக்கு சொல்ல விடாமல் தடுக்கிறது என்று கூறுகிறார்.

இதனால் குடும்பத்தினர் அனைவரும் அந்த நபர் யார் என்று ஆர்வமாக கேட்கின்றனர். அந்த நேரத்தில் வீட்டிற்குள் ராணா வர, இப்போது இந்த வீட்டிற்குள் வந்துகொண்டிருப்பவர் தான் என அலமேலு அம்மாள் கூறுகிறார். இதைக் கேட்டு கரிகாலன், மாமாவின் உயிரைக் காப்பாற்றியவர் ராணா தான். அவர் எப்படி பிரச்சனையாக இருக்க முடியும்? என்று கேள்வி எழுப்புகிறார். உடனே ராணா, சாமி வருவது, அருள்வாக்கு சொல்வது எல்லாம் ஒரு உளவியல் சார்ந்த விஷயம். இதற்காக ஒரு மனநல மருத்துவரை சந்தித்தால் நல்லது என்றார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதற்கிடையில் கதிர் மற்றும் ஞானத்தை தனியாக அழைத்துச் செல்லும் ராணா, அவர்களுக்கு சரக்கை ஊத்தி கொடுத்து, நெருக்கமாக பேசி மனதை மாற்ற முயல்கிறார். உங்கள் அண்ணன் உங்களைப் பற்றித்தான் கவலைப்படுகிறார். அவர் சேர்த்து வைத்த சொத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை விட நீங்கள் தனியாக தொழில் தொடங்க வேண்டும் என்பதே அவரது ஆசை. மேலும் உங்கள் மீது இருக்கும் அதிருப்தியால் தனது சொத்துக்களை மகனின் பெயருக்கு எழுதிவிடவும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறி அவர்களை தூண்டுகிறார். ராணாவின் பேச்சில் சிக்கிக் கொண்ட கதிர் மற்றும் ஞானம் இருவரும், தனியாக தொழில் தொடங்கப் போவதாக உறுதியளிக்கின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

ராணாவின் பிளான்: மறுபுறம், சக்தி ஜனனிக்கு போன் செய்து சாருபாலாவிடம் விஷயத்தை சொல்லிவிட்டேன். ஆனால் நீங்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் அது உனக்கே பாதகமாக மாறிவிடும். அதனால் விரைவில் நானும் அங்கு வருகிறேன். அதுவரை நீயும் தர்ஷினியும் பாதுகாப்பாக இருங்கள் என்று எச்சரிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைந்துள்ளது. அடுத்த எபிசோடில் ராணாவின் உண்மையான நோக்கம் குடும்பத்தினருக்கு தெரிய வருமா? கதிர், ஞானம் இருவரும் உண்மையிலேயே தனியாக பிரிவார்களா? ஜனனி நீதிமன்றத்தில் ஆஜராக முடிவெடுப்பாரா? என்ற பரபரப்பான திருப்பங்களை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X