நீ நேத்து வந்தவன்.. ஜனனி பத்தி உனக்கென்ன தெரியும்? ராணாவை விளாசிய விசாலாட்சி.. எதிர்நீச்சல்!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பின் உச்சத்திற்கே சென்று கொண்டிருக்கிறது. தர்ஷினி கடத்தல் வழக்கு, போலீஸ் கேஸ் என அடுத்தடுத்து சிக்கலில் தவிக்கும் குணசேகரன் குடும்பத்திற்குள், புகுந்து விளையாடி வரும் வில்லன் ராணாவின் நிஜ முகம் மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியுள்ளது.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், வீட்டில் நடக்கும் அத்தனை அராஜகங்களுக்கும், தர்ஷினி கடத்தலுக்கும் ஜனனி தான் முழு முதல் காரணம் என்று ராணா பழி போடுகிறார். அதுமட்டுமில்லாமல், சுவாமிநாதனை வரவழைத்து தர்ஷினியைக் கடத்தியதே ஜனனி தான் என அபாண்டமாகப் பேசுகிறார். இதைக் கேட்டு ஆத்திரத்தின் எல்லைக்கே செல்லும் விசாலாட்சி, சும்மா நிறுத்துப்பா... எங்க வீட்டுப் பொண்ணப் பத்தி எனக்கு நல்லா தெரியும். நீ நேத்து வந்தவன், ஜனனியப் பத்தி உனக்கு என்ன தெரியும்? தேவையில்லாம அவங்களை பத்தி தப்பு தப்பா பேசிக்கிட்டு இருக்காதே. நீ இந்த வீட்டுக்கு வந்ததுல இருந்து எதுவுமே சரியில்லை. பொண்ணு தேடுறேன்னு சொல்லி மூணு நாளா போயிட்டு வர்றே, ஆனா இதுவரைக்கும் பொண்ணைப் பத்தி எந்த விபரமும் சொல்லல. அதை விட்டுட்டு எங்க வீட்டு ஆட்களைப் பத்தி தப்பு தப்பா பேசிக்கிட்டு இருக்கே. இதுக்கு மேல இந்த வேலை எல்லாம் வச்சுக்காதே என ராணாவின் வாயை அடைக்கிறார்.

மாட்டிய சக்தி: விசாலாட்சியிடம் வாங்கிய டோஸால் கடும் கோபமடையும் ராணா, உடனடியாக விக்கிக்கு கால் செய்கிறார். அந்த நேரத்தில், சக்தி சிறுமலைக்கு முன்னாடியே காரில் இருந்து இறங்கிவிடும் விக்கி. இந்த விஷயத்தை ராணாவிடம் பகிர்ந்து, நீங்க சொன்னபடியே நான் சக்தியைக் கண்டுபிடிச்சுட்டேன். அவனைப் பின்தொடர ரெண்டு பேரை அனுப்பியிருக்கேன். கூடிய சீக்கிரத்துல அவங்க எல்லாரையுமே நான் ஒட்டுமொத்தமா தூக்கிடுவேன் என்று தில்லாகக் கூறுகிறான். இதைக் கேட்டு நிம்மதியடையும் ராணா, மீண்டும் வீட்டுக்குள் வந்து, நாம நெருங்கிட்டோம், இன்னும் கொஞ்ச நேரத்துல நல்ல செய்தி வரும் என்கிறார்.

கொடூரப் பழிவாங்கல்: அதன் பிறகு, குணசேகரன், கதிர், ஞானம் ஆகிய மூவரையும் யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு வெளியே தனியாக வரச் சொல்கிறார் ராணா. அங்கே வந்தவர்களிடம் ஒரு அதிர்ச்சிகரமான ரகசியத்தை உடைக்கிறார். உங்க மேல போட்டிருக்க கேஸுக்கும், தர்ஷினி கடத்தலுக்கும் ஒரே ஒரு முக்கியக் காரணம் தான் இருக்கு. நீங்க ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல உங்க மனைவி ஈஸ்வரியை அடிச்ச வீடியோ அவங்ககிட்ட இருக்கு. அதை வச்சு உங்களை அரெஸ்ட் பண்ணத்தான் பிளான் போட்டாங்க. ஆனா, அந்த வீடியோ இப்போ என்கிட்ட இருக்கு. இதை நீங்களே உங்க கையால டெலிட் பண்ணிடுங்க என குணசேகரனிடம் போனை கொடுக்கிறார். அந்த வீடியோவை அவசர அவசரமாக டெலிட் செய்யும் குணசேகரன், தம்பி, நீங்க எனக்கு எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கீங்க தெரியுமா என ராணாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு உருகுகிறார்.
ஆனால், ராணாவின் மனசுக்குள் தன்னுடைய அம்மாவைக் குணசேகரன் கொலை செய்ததை மனதில் வைத்துக் கொண்டுதான், குணசேகரனுக்கு உதவுவது போல நடித்து, மொத்த குடும்பத்தையும் அடியோடு அழிக்க ராணா சூட்சமமாகத் திட்டம் தீட்டுகிறார். நீங்க எனக்குப் பெரிய பெரிய உதவி எல்லாம் செஞ்சிருக்கீங்க, இன்னைக்கு நான் இந்த நிலைமையில இருக்கக் காரணமே நீங்கதான். அதான் உங்களுக்கு ஏதாவது நல்லது செய்யணும்னு ஆசைப்படுறேன் என உள்ளே ஒரு கொடூரமான பழிவாங்கல் வெறியை வைத்துக்கொண்டு ராணா பேசும் காட்சிகளோடு இன்றைய பரபரப்பான எபிசோட் நிறைவடைகிறது,


Click it and Unblock the Notifications