தர்ஷினியை வீட்டுக்கு அழைத்து வந்த ராவணன்.. அதிர்ச்சியில் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடில், சிறுமலை கிராமத்தில் ஜனனியை சந்திக்கும் விக்கி, ஜனனியை சந்தித்து நல்லவன் போல பேசுகிறான். ஆனால், சக்தி அங்கு வந்தவுடன், விக்கி முகமூடி அணிந்திருந்த மர்ம நபர் என்பதும் தெரியவருகிறது. இதையடுத்து சக்தி, விக்கியை தாக்கிவிட்டு ஜனனி மற்றும் தர்ஷினியுடன் அங்கிருந்து தப்பிக்கிறார். ஆனால் விக்கி, தனது ரவுடிகளுக்கு போன் செய்து, சக்தி மற்றும் ஜனனியை கொன்றுவிட்டு, தர்ஷினியை மட்டும் உயிருடன் அழைத்து வரும்படி உத்தரவிடுகிறான். ரவுடிகள் தொடர்ந்து துரத்துவதால், ஒரு இடத்தில் தர்ஷினியை அமர வைத்துவிட்டு, அவர்களின் கவனத்தை திசைதிருப்ப சக்தியும் ஜனனியும் வேறு வழியில் செல்கிறாள்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: அந்த நேரத்தில் மர்ம நபரான ராவணன் அங்கு வந்து தர்ஷினியை அழைத்துச் செல்கிறான். வழியிலேயே குணசேகரனுக்கு வீடியோ கால் செய்து, தர்ஷினி பாதுகாப்பாக என்னுடன் இருக்கிறான், இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுகிறோம் என்கிறான். இதைப் பார்த்த குடும்பத்தினர் அனைவரும் நிம்மதி அடைகின்றனர். ராவணன் தர்ஷனியை வீட்டிற்கு அழைத்துவர, தர்ஷினி மிகவும் சோர்வாகவும் மயக்கமான நிலையிலும் இருப்பது அனைவரையும் கவலையடையச் செய்கிறது.

விசாலாட்சி சொன்ன தகவல்: இதே நேரத்தில், சிறுமலையில் தர்ஷினியை காணாமல் தவிக்கும் ஜனனி மற்றும் சக்தி இருவரும் பதற்றத்தில் இருக்கின்றனர். அப்போது, விசாலாட்சி போன் செய்து, தர்ஷினி வீட்டிற்கு வந்துவிட்டாள், ராவணன் தான் அழைத்து வந்தான். ஆனால் அவள் மயக்கமாக இருக்கிறாள். அவளை தேடி போன நீங்க எங்கே போனீங்க, வீட்டில் என்னென்னமோ நடந்துவிட்டது. நீங்க வீட்டுக்கு வாங்க, வீட்டில் பெரியவன் ஏதாவது பிரச்சனை செய்தா நீ எதுவும் பேசாதே, அம்மா இருக்கேன் சக்தி, நீ வீட்டுக்கு வா எல்லாத்தையும் அம்மா பார்த்துக் கொள்கிறேன் என்கிறாள். இதைக்கேட்டு ஜனனியும் சக்தியும் கடும் அதிர்ச்சி அடைகின்றனர். ராவணன் யார்? அவர் ஏன் தர்ஷினியை காப்பாற்றுகிறார்? அவரது உண்மையான நோக்கம் என்ன? என்ற கேள்விகளுடன் இன்றைய எபிசோட் பரபரப்பாக முடிகிறது. இனி அடுத்து என்ன நடக்கக்போகிறது என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications