தர்ஷினியை கடத்துனது இந்த ராணாதான்.. குணசேகரன் முன்னாடியே உண்மையை உடைத்த ஜனனி!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினி இன்னும் மயக்க நிலையிலேயே இருப்பதால், அவளைப் பார்த்து ஈஸ்வரி மிகவும் கவலையடைகிறார். உடனே ராணாவிடம், தர்ஷினிக்கு என்ன ஆனது? டாக்டர்கள் என்ன சொன்னார்க என்று கேட்கிறாள். அதற்கு ராணா, இன்னும் கொஞ்ச நேரத்தில் தர்ஷினி கண் திறந்துவிடுவாள். அவள் நலமடைந்த பிறகு எல்லா உண்மைகளையும் சொல்கிறேன் என்கிறார்.

ஆனால் ஈஸ்வரி வற்புறுத்தியதால், உண்மையை சொல்லும் ராணா, தர்ஷினியை பார்க்கச் சென்றபோது, அவளை கொலை செய்ய ஒருவர் தயாராக இருந்ததாகவும், அந்த நபரை சுட்டுக் கொன்ற பிறகுதான் தர்ஷினியை காப்பாற்றி அழைத்து வந்ததாகவும் கூறுகிறார். இந்த தகவலைக் கேட்டு குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். பின்னர் ராணா ஒரு போட்டோவை காட்டி, இந்த நபரை உங்களுக்கு தெரியுமா? என்கிறார். அதைப்பார்த்த நந்தினியும் ரேணுகாவும், ஜனனியின் அலுவலகத்தில் மேனேஜராக இருந்தவர். ஆனால் ஜனனிக்கும் இவருக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்தது என்கிறார்கள். அதற்கு ராணா, அந்த சண்டை வேறு. ஆனால் இப்போது இந்த நபரும் ஜனனியும் சேர்ந்து தர்ஷினியை கடத்தி கொலை செய்ய முயன்றார்கள். கடைசி நேரத்தில் நான் சென்று அவனை சுட்டு, தர்ஷினியை காப்பாற்றினேன் என்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதைக் கேட்ட குணசேகரன், என் தம்பி சக்தி எனக்கு எதிரியாகிவிட்டான். ஆனால் நீ என் தம்பியாக இருந்து என் குடும்பத்தைக் காப்பாற்றியிருக்கிறாய். இந்த நன்றியை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று ராணாவிடம் கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கிறார்.
அந்த நேரத்தில் ஜனனியும் சக்தியும் வீட்டிற்குள் வருகிறார்கள். அவர்களைப் பார்த்த குணசேகரன் கடும் கோபத்தில், இனிமேல் இந்த வீட்டுக்குள் வரக்கூடாது என கோவத்தில் கத்துகிறார்.

எனக்கு உன்மேலத்தான் சந்தேகம்: அப்போது ஜனனி, தர்ஷினியை நாங்கள் கடத்தவில்லை. இது முழுக்க திட்டமிட்ட நாடகம் என்று கூறுகிறார். அதற்கு ராணா, அப்படியானால் தர்ஷினியை காப்பாற்றி வந்தது யார்? என்று கேட்க, நான் தான் காப்பாற்றினேன் என்று மீண்டும் உறுதியாகச் சொல்கிறார். உடனே ஜனனி, தர்ஷினி இருந்த இடம் உனக்கு எப்படி தெரிந்தது? நீ எப்படி அங்கே வந்தாய்? எப்படி காப்பாற்றினாய்? என்று தொடர்ந்து கேள்வி எழுப்புகிறார். அதற்கு ராணா, உன் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அங்கே இறந்து கிடந்தவன் யார்? அவனுக்கும் உனக்கும் என்ன தொடர்பு? பதில் கேள்வி கேட்கிறார். இதற்குப் பிறகு, ஜனனி சக்தியிடம், விக்கியிடம் யாரோ ஒருவன் பாஸ் மாதிரி பேசிக்கொண்டிருந்ததாக நீ சொன்னால, அது இந்த ராணாவாகவே இருக்கலாம். இப்போ எனக்கு அவன் மீதுதான் எனக்கு சந்தேகம் என்கிறார். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X