அய்யோ தர்ஷினி.. ஜனனி கைது செய்யப்படலாம்? எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: தர்ஷினி காணாமல் போனதில் இருந்து குடும்பத்தில் பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. நேற்றை எபிசோடில் கோவப்பட்ட ஈஸ்வரி, என் மகளை பற்றி நீ விசாரிக்க வேண்டும்? என் மகளைப் பற்றி விசாரணை நடத்த நீங்க யார்?" என்று கேள்வி எழுப்புகிறார். உடனே ஜனனி, அய்யோ அக்கா, என்ன நடந்தது என்று முழுமையாக தெரியாமல் இருக்கும்போது எப்படி உங்களிடம் இதைப் பற்றி பேச முடியும்? என்று கூறுகிறார்.

என்னுடைய மகளுக்கு தேவையில்லாமல் முத்திரை குத்த வேண்டாம் அவ சின்ன பொண்ணு என சொல்கிறாள். அப்போது சக்தி, அந்த பையனின் அறையில் இருந்த பெட்டியில் தர்ஷினியும் அவனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ இருந்தது. அதனால்தான் நாங்கள் அவனிடம் விசாரணை நடத்தினோம் என்று விளக்குகிறார். ஆனால் அதையும் ஏற்க மறுக்கும் ஈஸ்வரி, தேவையில்லாமல் என் மகளைப் பற்றி நீங்கள் விசாரிக்க வேண்டாம். தயவுசெய்து இந்த விஷயத்தில் தலையிடாதீங்க, என்னுடைய மகளுக்கு ஏதாவது நடந்தால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில் சக்தி மற்றும் ஜனனி இருவரும் இந்த விவகாரம் குறித்து கவலையுடன் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஜனனி, நாளை போலீசார் என்னிடம் எதற்காக விசாரணை நடத்தப் போகிறார்கள்? நான் என்ன தவறு செய்தேன்? என்று பதற்றத்துடன் கேட்கிறார். அதற்கு சக்தி, இவங்க ஏதோ திட்டமிட்டு பிரச்சனை செய்கிறார்கள் போல இருக்கிறது. இதுகுறித்து உடனடியாக சாருபாலாவிடம் பேசு என்று அறிவுறுத்துகிறார்.

ஜனனி கைது செய்யப்படலாம்: இதையடுத்து ஜனனி, தர்ஷினி காணாமல் போன சம்பவம் தொடர்பாக போலீசார் தன்னிடம் விசாரணை நடத்த உள்ளதாக சாருபாலாவிடம் தெரிவிக்கிறார். இதைக் கேட்ட சாருபாலா, நாளை மிகவும் முக்கியமான வேலைக்காக நான் வெளியூர் செல்ல இருக்கிறேன். அதனால் என்னால் அங்கு இருக்க முடியாது. போலீசார் என்ன கேள்வி கேட்டாலும் தெளிவாக பதில் சொல்லுங்கள். அதே நேரத்தில், ஏதேனும் காரணத்தால் உங்களை கைது செய்யும் நிலை ஏற்பட்டால், உடனடியாக ஜாமீன் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொள்ளுங்க என்று கூறுகிறார். சாருபாலாவின் இந்த பதிலால் ஜனனி மற்றும் சக்தி இருவருக்கும் அதிர்ச்சி அடைகின்றனர்.

மனவேதனையில் இருக்கும் ஜனனி கண்கலங்கி அழுகிறார். "தர்ஷினி எங்கு சென்றாள், இப்போது எங்கே இருக்கிறாள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.அவளை தேடுவதற்கு யாரும் முயற்சி செய்யவில்லை, நாமும் தேடக்கூடாது என்று சொல்லி வீட்டில் இருக்க சொல்லுகிறார்கள் என வருத்தப்படுகிறாள் இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X