மாட்டிப்பாரா ராணா? போலீஸையே திருப்பி அனுப்பிய ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் சீரியலின் எபிசோடு முழுக்க முழுக்க பரபரப்பாக நகர்ந்தது. சக்தி மற்றும் ஜனனி இருவரும் வீட்டிற்குள் வந்ததை பார்த்த ராணா அதிர்ச்சியடைந்து, நான் கேட்ட கேள்விக்கு முதலில் பதில் சொல்லுங்கள். சிறுமலையில் இறந்து கிடந்தவன் யார்? அவனுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? என்று ஜனனியிடம் நேரடியாக கேள்வி எழுப்புகிறார். இதனால் ஆத்திரமடைந்த ஜனனி, முதலில் நீ யார்? நீ எப்படி அந்த இடத்துக்கு வந்தே? தர்ஷினியை எப்படி அங்கிருந்து காப்பாற்றுன என்று பதிலுக்கு பதில் கேள்வி கேட்கிறார். உடனே ஜனனி, சக்தியுடம் நீ விக்கிக்கு யாரோ ஆர்டர் போடுறத அவன் செய்றானு சொன்னீயே, அது ஏன் ராணாவாக இருக்கக் கூடாது? எனக்கு இவர் மேல் தான் எனக்கு சந்தேகம் இருக்கிறது என்கிறாள்
உடனே ஈஸ்வரி குறுக்கிட்டு, ஜனனி, நீ செய்த தவறை மறைப்பதற்காக அடுத்தவர்கள் மீது பழி போடாதே. இவரால்தான் தர்ஷினி உயிருடன் இந்த வீட்டுக்கு வந்திருக்கா என்று ராணாவுக்கு ஆதரவாக பேசுகிறார். அதற்கு சக்தி, அதைத்தான் நானும் கேட்கிறேன். இவருக்கு அந்த இடம் எப்படி தெரியும்? முதலில் அதற்கு பதில் சொல்லட்டும் என்கிறாத்ர. அப்போது கதிர் குறுக்கிட்டு, அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. நீங்க முதலில் இந்த வீட்டை விட்டு வெளியே போ என்று சண்டைக்கு செல்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அதைத்தொடர்ந்து, கதிர் அமைதியா இரு ஞானம், நான் ஏற்கனவே போலீசுக்கு தகவல் கொடுத்திருக்கேன். அவங்க வந்து இவங்களைக் கூட்டிட்டு போவாங்க என்று சொல்லும் நேரத்தில் போலீசார் வீட்டுக்குள் வருகிறார்கள். போலீசார் ஜனனியிடம், விசாரணைக்காக நீங்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வேண்டும் என்கின்றனர். அதற்கு ஜனனி, நான் மட்டும் ஏன் வர வேண்டும்? இந்த வீட்டில் இருப்பவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும். அதுவும் எஸ்.பி. முன்னிலையில் நடத்த வேண்டும். குறிப்பாக ராணாவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்கிறாள்.

கொந்தளித்த விசாலாட்சி: இதையடுத்து போலீசார் அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார்கள். ஆனால் கதிர் தொடர்ந்து, ஜனனி இந்த வீட்டில் இருக்கக் கூடாது என்று சண்டை போடுகிறான். இதனால், ஆத்திரமடைந்த விசாலாட்சி, ஜனனியும் சக்தியும் இந்த வீட்டில்தான் இருப்பார்கள். இதற்கு மேல் அவங்களை வெளியே போகச் சொன்னா நான் சும்மா இருக்க மாட்டேன். டேய் பெரியவனே, உனக்கே இவ்வளவு கோபம் இருக்கும்போது உன்னைப் பெத்த எனக்கு எவ்வளவு கோபம் இருக்கும் தெரியுமா? இனிமேலும் அவங்களை வெளியே அனுப்பணும்னு சொன்னா நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. இனி இந்த வீட்டில் இரண்டு உளைகொதிக்கும் என்று கடும் கோபத்தில் எச்சரிக்கிறார். இறுதியாக, சக்தி மற்றும் ஜனனி இருவரையும் தனது அறைக்கு அழைத்துச் செல்கிறாள். இன்றைய எபிசோடு பரபரப்பான திருப்பத்தில் முடிவடைந்தது.


Click it and Unblock the Notifications