ஜனனிக்கு வலைவீசும் போலீஸ்.. தர்ஷினியை காப்பாற்றப்போவது யார்?
சென்னை: தர்ஷினி காணாமல் போன சம்பவம் தொடர்பாக போலீசார் தன்னிடம் விசாரணை நடத்த உள்ளதாக சாருபாலாவிடம் தெரிவிக்கிறார் ஜனனி. இதைக் கேட்ட சாருபாலா, நாளை மிகவும் முக்கியமான வேலைக்காக நான் வெளியூர் செல்ல இருக்கிறேன். அதனால் என்னால் அங்கு இருக்க முடியாது. போலீசார் என்ன கேள்வி கேட்டாலும் தெளிவாக பதில் சொல்லுங்கள். அதே நேரத்தில், ஏதேனும் காரணத்தால் உங்களை கைது செய்யும் நிலை ஏற்பட்டால், உடனடியாக ஜாமீன் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொள்ளுங்க என்று கூறுகிறார். இதைக்கேட்டு, மேம் நான் என்ன தப்பு பண்ணேன் என்ன ஏன் கைது செய்ய வேண்டும் என கேட்டு வருத்தப்படுகிறார்.
இன்றைய எபிசோடில், தர்ஷினி மற்றும் அவரது நண்பரை ராணா சில ரௌடிகளை வைத்து ரகசியமான இடத்தில் கடத்தி வைத்து இருப்பது தெரியவருகிறது. அவர்களை கண்காணித்து வரும் ரவுடியிடம் ஃபோன் செய்யும் ராணா, இரண்டு பேரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறார். அப்போது அந்த ரவுடி, சார் முகத்தைக் கூட காட்ட மாட்டீங்களா, ஃபோன்ல தான் பேசுறீங்க, பணத்தை மட்டும் அனுப்புறீங்க; நீங்க யார் சார்? என்று கேட்கிறான்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது ராணா, நான் யாரா இருந்தா உனக்கு என்ன, யார் என்ன என்று கேட்காதே, உனக்கு தேவை பணம் தான், அது சரியாக நேரத்தில் கிடைக்கும். என்னைப் பற்றி எதுவும் கேட்கக் கூடாது என்று எச்சரிக்கிறார். அப்போது, ராணா தனது பி.ஏ. லட்சுமணனிடம், தர்ஷினி காணாமல் போன வழக்கில் ஜனனியை போலீசார் கைது செய்யப்படுவார் என்று கூறுகிறார். அதற்கு லட்சுமணன், ஜனனி கைது செய்யப்பட்டால் குணசேகரனுக்கு எதிரான வழக்கு என்ன ஆகும்? அந்த வழக்கில் ஜனனி தானே முக்கிய சாட்சி அல்லவா?' என்று கேட்கிறார். அதற்கு ராணா, குணசேகரனுக்காக நான் வேறு ஒரு பெரிய திட்டம் வைத்திருக்கிறேன் என்று பதிலளிக்கிறார்.

காணாமல் போன ஜனனி: மறுபுறம் குணசேகரன் வீட்டிற்கு வரும் போலீசார் ஜனனியிடம் விசாரிக்க வேண்டும் எனக் கூறுகின்றனர். அப்போது, குணசேகரன் தர்ஷினி பற்றி ஏதாவது தெரிந்ததா என்று கேட்க, எந்த துப்பும் கிடைக்கவில்லை சார். ஜனனி தான் கடைசியாக அவரிடம் பேசி இருக்கிறார். இதனால் ஜனனியிடம் தான் விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்கிறார். ஆனால். ஜனனி வீட்டில் இல்லாததால் இன்ஸ்பெக்டர் கோபமடைந்து, உங்க மனைவி கர்ப்பமாக இருந்ததால் நான் இரண்டு நாள் டைம் கொடுத்தேன்.ஆனால், இப்போ காணவில்லை என்றால் என்ன அர்த்தம் என்கிறார். இதனால் தர்ஷினியை கடத்தியது ஜனனி தான் என்ற சந்தேகம் வலுக்கிறது.
நடக்கப்போவது என்ன?: மறுபக்கம், காரில் சென்று கொண்டிருக்கும் ஜனனிக்கு திடீரென தர்ஷினியின் நண்பர் பற்றி கூறிய தகவல்கள் நினைவுக்கு வருகின்றன. குறிப்பாக அந்த நண்பரின் வீடு இருக்கும் கிராமத்தின் பெயர் ஞாபகம் வந்தவுடன், உடனே அந்த கிராமத்திற்கே காரை திருப்பிச் செல்லச் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது. ஜனனி அந்த கிராமத்தில் என்ன கண்டுபிடிக்கப் போகிறார்? தர்ஷினி இருக்கும் இடத்தை அவர் கண்டறிவாரா? ராணாவின் அடுத்த திட்டம் என்ன? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் அடுத்த எபிசோடைக் காண காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications