கதிரை மிரட்டிய சக்தி.. குணசேகரனை அதிரவைத்த ரகசிய வீடியோ ஆதாரம்!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினி காணாமல் போன விவகாரத்தில் ஜனனி மீது சந்தேகம் திரும்பியதால், அவரிடம் விசாரணை நடத்த போலீசார் வருகிறார்கள். இந்த வழக்கில் சிக்கிக் கொண்டால் தர்ஷினியை கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்த ஜனனி, வீட்டை விட்டு தப்பி ஓடிவிடுகிறாள்.
இன்றைய எபிசோடில், ஜனனி காரில் சென்று கொண்டு இருக்க, அப்போது தான் தர்ஷினி சுவாமிநாதன் பற்றியும், அவன் ஊர் பற்றியும் சொன்னது ஜனனிக்கு நினைவுக்கு வருகிறது. சுவாமிநாதனின் வீடு சிறுமலை என்ற கிராமத்தில் இருப்பதை அறிந்து அங்கு செல்கிறார். ஆனால், மலைப்பகுதிக்குள் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்து நீங்க யாரு மலையில் யார் இருக்கிறார் என்று விசாரணை நடத்திவிட்டு, அனுமதி இல்லாமல் யாரையும் மலைக்குள் அனுமதிக்க முடியாது என சொல்கிறார். அந்த நேரத்தில் அங்கு வரும் ஒரு பெண், ஜனனியை தனக்குத் தெரிந்தவர் தான், என் சொத்தக்கார பெண் என்று பொய் சொல்லி மலைக்குள் அழைத்துச் செல்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபுறம், ஜனனி காணாமல் போனதால் சக்தியிடம் போலீசார் விசாரணை நடத்த வீட்டிற்கு வந்து அவரை அழைத்துச் செல்கிறார்கள். இதற்கிடையில் தர்ஷினியை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் குணசேகரன் கடும் கோபத்தில் வீட்டிற்கு வருகிறார். சூனியக்காரி ஜனனி, தர்ஷினியை எங்கே மறைத்து வைத்திருக்கிறாள் என்று தெரியவில்லை, நான் பல இடங்களில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று கூறுகிறார். இதைக் கேட்டு ஈஸ்வரி கதறி அழுகிறார். அப்போது குணசேகரன், உனக்காகத்தான் நான் பொறுத்துக் கொண்டு இருக்கிறேன், இல்லையென்றால் வேறு மாதிரி நடந்திருக்கும் என்று கோபமாக பேசுகிறார்.

ஜனனி எங்கே: அந்த சமயத்தில் வீட்டிற்கு வரும் சக்தி, ஜனனியை நீங்கள் தான் எங்கோ கடத்தி வைத்திருக்கிறீர்கள். தர்ஷினியை தேடிப்போன ஜனனியை இப்போது காணவில்லை என்கிறார். உங்க வழக்கு விசாரணைக்கு வரக்கூடாது என்பதற்காக அவளை மறைத்து வைத்து இருக்கீங்க என்று குற்றம் சாட்டுகிறார். இதைக்கேட்டு வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ஆதாரம் இருக்கு: உடனே கதிர், ஜனனி எங்கே போனாளோ யாருக்கு தெரியும் என்று கோவப்படும் சக்தி, ஜனனி மட்டும் எதாவது ஆச்சுனா எல்லாரையும் வெட்டிவிட்டு ஜெயிலுக்கு போய்விடுவேன் என சொல்கிறான். இதனால், சக்திக்கும் கதிருக்கும் இடையே சண்டை வர, குணசேகரன் இருவரையும் சமாதானப்படுத்துகிறார். பின் என்ன சக்தி சொல்ற ஜனனியை காணவில்லை என கேட்க, ஆத்திரமடைந்த சக்தி, எதுவுமே தெரியாதது போல நடிக்காதீங்க, இதுக்கு மேலையும் நீங்க நடிக்க முடியாது. அண்ணியை நீங்கள் அடித்ததற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது என்று சக்தி சொல்ல, குணசேகரன் அதிர்ச்சி அடைகிறார். இந்த பரபரப்பான காட்சிகளுடன் இன்றைய எபிசோடு நிறைவடைந்தது. அடுத்த எபிசோடில் ஜனனி உண்மையில் எங்கே இருக்கிறார்? தர்ஷினி பற்றிய மர்மம் என்ன? சக்தி வைத்திருக்கும் வீடியோ ஆதாரம் குணசேகரனுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்துமா? என்பதைக் காத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications