ஜனனியை காப்பாற்ற துப்பாக்கியால் சுட்ட அருந்ததி.. காணாமல் போன ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது
சென்னை: தர்ஷினியை தேடி சிறுமலைக்கு சென்ற ஜனனிக்கு அருந்ததி என்கிற பெண் உதவி செய்கிறாள். இதையடுத்து, அந்த பெண்ணின் வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சிலர் திடீரென அங்கு வந்து ஜனனியை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றனர். இதைப் பார்த்த அந்த வீட்டுப் பெண்கள் துணிச்சலாக எதிர்த்து நின்று அவர்களை தாக்குகின்றனர். இதையடுத்து என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், ஜனனியை மலையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று சிலர் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அருந்ததி பலமுறை சமாதானப்படுத்த முயன்றும் அவர்கள் கேட்காததால், வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து இருவரையும் சுடுகிறார். இதைப் பார்த்த ஜனனி கடும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.
பதறிய குடும்பம்: மறுபக்கம், குணசேகரன் வீட்டில் ஈஸ்வரியை காணாததால் அனைவரும் பதற்றமடைகின்றனர். பல இடங்களில் தேடியும் அவள் கிடைக்காததால் குழப்பமடைந்த குணசேகரன், ஈஸ்வரியின் தந்தைக்கு ஃபோன் செய்து, ஈஸ்வரி அங்கு வந்திருக்கிறாரா என்று விசாரிக்கிறார். ஆனால், அவர் வரவில்லை என்று கூற, குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். நந்தினி பூஜை அறைக்குச் சென்று தேடிப் பார்க்கும்போது, அங்கு ஈஸ்வரி மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.

இதற்கிடையில், அருந்ததி இருவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தை நினைத்து ஜனனி அதிர்ச்சியில் இருக்கிறாள். அப்போது பேண்ட், சட்டை அணிந்தபடி அருந்ததி அங்கு வருவதைக் கண்டு மேலும் குழம்பிப் போகிறார். பின்னர் அருந்ததி தனது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை ஜனனியிடம் பகிர்ந்து கொள்கிறார். நான் சுட்டதை மட்டும் தான் நீங்கள் பார்த்தீர்கள். ஆனால், அதற்கு பின்னால் நாங்கள் சந்தித்த வேதனைகள், போராட்டங்கள், வழிகள் உங்களுக்கு தெரியாது.
அருந்ததியின் கதை: தனக்கு ஒரு தம்பி இருந்தான். குடும்பமே மகிழ்ச்சியா வாழ்ந்துக்கிட்டு இருந்தோம். என்னால் படிக்க முடியாததால், தம்பியை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பதே கனவாக இருந்தது. என் தம்பி பத்தாம் வகுப்பில் மாநில அளவில் சிறந்த மதிப்பெண் பெற்றதுடன், பன்னிரண்டாம் வகுப்பிலும் சிறப்பாக தேர்ச்சி பெற்று நல்லா படிச்சான். அடுத்து கல்லூரி தான், முடித்து நல்ல வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுவார் என அனைவரும் கனவு கண்ட நிலையில், எதிர்பாராத விதமாக ஒரு துயரமான சம்பவம் நடந்தது. அந்த சம்பவம் என்ன என்பது அடுத்த எபிசோடில் தெரியவரும் என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய எபிசோடு நிறைவடைந்தது. அருந்ததியின் தம்பிக்கு என்ன நடந்தது? அந்த சம்பவமே இன்றைய சூழ்நிலைக்கு காரணமா? என்ற கேள்விகளுக்கு அடுத்த எபிசோடுகளில் பதில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications