காரில் சிக்கி மூச்சுத்திணறும் குணசேகரன்.. ஜனனியை சிக்க வைத்த ராணா.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: குணசேகரன் வீட்டுக்கு வரும் வழக்கறிஞர் வழக்கின் தேதி வந்துவிட்டது. அந்த தேதியில் நீங்கள் அனைவரும் ஆஜராக வேண்டும் என்று சொல்கிறார். மேலும், அதுவரைக்கும் நீங்களும் உங்க தம்பிகளும் இந்த வீட்டை விட்டு வெளியில் வரக்வடாது என்று சொல்ல குணசேகரன் அது எப்படி, என் மகளை காணவில்லை அப்படி இருக்கும் போது வெளியில் போகாமல் எப்படி இருக்க முடியும் என கேட்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில் வழக்கறிஞர் வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராக வேண்டியிருப்பதால் வெளியே செல்லக்கூடாது என்று சொல்லியும், குணசேகரன் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் தனது சொந்த வாகனங்களை பயன்படுத்தாமல் வாடகை கார் மூலம் வெளியில் செல்கிறார். இதை கவனித்த கரிகாலன், வீட்டில் இத்தனை கார்கள் இருக்கும்போது மாமா ஏன் வாடகை காரில் எங்க போகிறார் என்று கேட்க, கதிர் மற்றும் ஞானம் ஏதோ சொல்லி சமாளிக்கின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

நோட்டமிட்ட அருந்ததி: மறுபுறம், தர்ஷினியை தேடும் முயற்சியில் அருந்ததி மற்றும் ஜனனி ஈடுபடுகின்றனர். ஒரு குறிப்பிட்ட கடையின் அருகே இருவரும் நின்று கொண்டு, இந்த கடையில் தான் போதை பொருள் கிடைக்கும், தர்ஷினியை கடத்திய நபரை அன்னைக்கு பாக்கும் போதே எனக்கு சந்தேகமா இருந்தது. நிச்சயம் அவர்கள் இந்த கடைக்கு வர வாய்ப்பு இருக்கு, நாம இங்கே இருந்து கடையை நோட்டமிடலாம், நாம தேடும் நபர் வந்தால் அவனை வைத்து தர்ஷினி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடலாம் என சொல்கிறார். அதே நேரத்தில், ஜனனி தான் பாதுகாப்பாக இருப்பதை சக்திக்கு தெரிவிக்க வேண்டும் என்று அருந்ததியின் மொபைலை வாங்கி அழைக்க முயற்சிக்கிறார். ஆனால் தொடர்பு கிடைக்காததால், நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்ற மெசேஜை அனுப்புகிறார்.

மூச்சு திணறும் குணசேகரன்: இதற்கிடையில், குணசேகரன் காரில் சென்று கொண்டு இருக்க, திடீரென கார் டிரைவர் காரை நிறுத்தி, ஏசியை அணைத்து, ஜன்னல்களை மூடி விட்டு காரின் கதவை மூடுகிறார். இதனால், காருக்குள் சிக்கிக் கொண்ட குணசேகரன் மூச்சுத்திணறி தவிக்கிறார். வெளியே வந்த டிரைவர், ஜனனி மேடம் நீங்க சொன்னபடியே செய்து விட்டேன் என்று சொல்லிவிட்டு அந்த காரை விட்டு விட்டு அங்கிருந்து செல்கிறார். காரில் குணசேகரன் மூச்சு திணறிக்கொண்டு இருக்கிறார். நாளைய எபிசோடில், குணசேகரன் இந்த ஆபத்திலிருந்து தப்பிக்கிறாரா? டிரைவர் உண்மையிலேயே ஜனனியின் ஆளா அல்லது வேறு யாருடைய திட்டமா? தர்ஷினியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஜனனி ஏதாவது துப்பு கிடைக்குமா? என்பதை பொறுத்து இருக்கு பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X