குணசேகரன் ஒழிய வேண்டும்.. ராவணன் சூழ்ச்சியில் சிக்கிய குடும்பம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது

சென்னை: ஜனனி குணசேகரன் மீது வழக்கு போட்டு இருப்பதால் இனிமேல் அந்த வீட்டில் இருக்க முடியாது என முடிவு செய்யும் ஜனனி சக்தியை இருவருமே வீட்டை விட்டு வெளியே வந்து விடுகின்றனர். இதனால் மதிவதனி எதற்காக யாரிடமும் சொல்லாமல் வந்தீங்க என கேட்க, இதற்கு மேல் அந்த வீட்டில் இருக்க முடியாது. அப்படியே இருந்தால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும் அதனால், இந்த வழக்கு முடியும் வரை வெளியில் இருக்கிறோம் என சொல்கின்றனர்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

இது தொடர்ந்து வழக்கறிஞர் சாருபாலாவின் ஏற்பாட்டின் பேரில் ஜனனி சக்தி இருவருமே தங்களுக்குத் தெரிந்த அரசு என்பவரின் வீட்டின் கெஸ்ட் ஹவுசிற்கு செல்கின்றனர். அப்போது அரசுக்கு ஒரு போன் வருகிறது, அந்த போனில் பேசும் ராவணன் இருவரையுமே நான் சொன்னபடியே அந்த வீட்டிற்கு அழைத்து வந்து விட்டீர்களா.. ரொம்ப சந்தோஷம்.. அவர்கள் இருவருமே குணசேகரன் தான் எதிரி என நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால், குணசேகரனுக்கும் ஜனனிக்கும் நடக்கும் இந்த பிரச்சனையில் ஒரு சுவாரஸ்யமான தகவல் இருக்கு தெரியுமா அரசு. அவர்களுக்கு முகம் தெரிந்த எதிரியை விட முகம் தெரியாத எதிரியால் தான் ஆபத்து அதிகம். அது தெரியாமல் இருவரும் மோதிக் கொண்டு இருக்கிறார்கள் என்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: அப்போது அரசு சார், எதற்காக நீங்கள் எனக்காக எவ்வளவு சப்போர்ட் செய்றீங்க, உங்களைப் பற்றியும் உங்களுடைய கம்பெனியை பற்றியும் நான் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், இதுவரை நான் உங்களை பார்த்ததே இல்லையே பிறகு எதற்காக இதையெல்லாம் செய்கிறீர்க என அரசு கேட்கிறார். அப்போது ராவணன் எல்லாத்திற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அந்த குணசேகரன் ஒழிய வேண்டும் என்பதுதான் உங்களுக்கு தேவையானது, அதே குணசேகரன் ஒழிய வேண்டும் அதுதான் ஜனனிக்கு தேவையானது, அதே போல குணசேகரன் ஒழிய வேண்டும் அதுதான் எனக்கு தேவையானது. அதையும் தாண்டி உங்களுக்கும் எனக்கும் ஒரு பொதுவான பிரச்சனை இருக்கிறது. அதைப்பற்றி நாம் பிறகு பேசிக் கொள்ளலாம். ஆனால், இந்த ஜனனி லேசு பட்டவள் என நினைத்து விடாதீங்க, எல்லாத்தையும் அவள் துல்லியமாக எடை போட்டு விடுவாள் ஜாக்கிரதையாக பார்த்துக் கொங்க என சொல்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X