சக்தி, ஜனனியை சூழ்ந்து கொண்ட ரௌடிகள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: அரசுக்கு ஃபோன் செய்யும் ராவணன், நீங்க எனக்காக எவ்வளவு சப்போர்ட் செய்றீங்க, உங்களைப் பற்றியும் உங்களுடைய கம்பெனியை பற்றியும் நான் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், இதுவரை நான் உங்களை பார்த்ததே இல்லையே பிறகு எதற்காக இதையெல்லாம் செய்கிறீர்க என அரசு கேட்கிறார். அப்போது ராவணன் எல்லாத்திற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அந்த குணசேகன் அழிய வேண்டும் என்கிறார். அதையும் தாண்டி உங்களுக்கும் எனக்கும் ஒரு பொதுவான பிரச்சனை இருக்கிறது. அதைப்பற்றி நாம் பிறகு பேசிக் கொள்ளலாம் என்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து இன்றைய எபிசோடில், ராவணன், அரசு வீட்டில் இருப்பதையும், நாளைக்கு வழக்கு தொடர இருப்பதையும் சொல்கிறார். இதற்கு ஆதரமாக வீடியோவையும் அனுப்புகிறார். இதைப்பார்த்து ஆத்திரப்படும் குணசேகரன் இதை ஈஸ்வரியிடம் காட்டும் படி கதிரிடம் சொல்கிறார். கதிர் வீட்டுக்கு வந்து ஈஸ்வரியிடம் அந்த வீடியோவை காட்ட ஈஸ்வரி எதற்காக ஜனனி இப்படி செய்கிறார் என நினைத்து வருத்தப்படுகிறார். இதையடுத்து, குணசேகரனை வீட்டுக்கு அழைத்து வர முயற்சி செய்கிறார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

கோவத்தில் குணசேகரன்: ஆனால், குணசேகரன், ஒன்னுமே இல்லாத அந்த வெறும் பய மகளுக்கே அவ்வளவு திமிரு இருக்கும் போது, ஆதி முத்துவின் வாரிசுக்கு எவ்வளவு திமிரு இருக்கும். அந்த ஜனனிக்கு ஒரு முடிவு கட்டாமல் நான் அந்த வீட்டுக்கு வரமாட்டேன் என தெளிவாக சொல்கிறார். இதைத்தொடர்ந்து ஈஸ்வரி குணசேகருக்கு போன் செய்து பந்தக்கால் நடவேண்டும் என்று சொல்ல, குணசேகரன் கோர்ட் விஷயம் முடியட்டும் என்றார். உடனே ஈஸ்வரி, கோர்ட் விஷயத்தால் தர்ஷனின் திருமணம் நிற்கக்கூடாது என்கிறார்.

நடக்கப்போவது என்ன: மறுபக்கம் அரசு வீட்டில் ஜனனி, சக்தி இருக்க போது யாரோ கதவை பயங்கரமாக தட்டுகின்றனர். அந்த சத்தத்தை கேட்டு இருவரும் பயப்பட, சக்தி ஜனனியை அறையைவிட்டு வெளியே வரக்கூடாது என சொல்லிவிட்டு கீழே இறங்கி வர, தொடர்ந்து கதவை யாரோ தட்டிக்கொண்டே இருக்கின்றனர். அதைத்தொடர்ந்து சக்தி அருகில் இருந்த சுத்தியை பாதுகாப்பிற்காக எடுத்துக்கொண்டு கதவை திறக்க செல்கிறார். இதன் மூலம் ஜனனி, சக்தியை ஒழிக்க யாரோ திட்டம் போட்டு இருப்பது நன்றாக தெரிகிறது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X