ஒரே அறையில் தர்ஷன் - அன்புக்கரசி.. பந்தக்கால் விழாவில் வெடித்த மோதல்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: பார்கவி, ஜனனிக்கு ஃபோன் செய்து, பந்தக்கால் நடுவதற்கான வேலைகள் நடக்கிறது. நீங்களும் வாங்க அக்கா என அழைக்கிறார். அதற்கு ஜனனி, நான் அங்கு வந்தால் பெரிய பிரச்சனை ஆகிவிடும். அக்காக்களை இப்படிப்பட்ட சூழ்நிலையில் சந்திக்கவே மனம் வரவில்லை. அவர்களை பார்க்கும்போது மிகவும் சங்கடமாக இருக்கிறது. இந்த வழக்கின் மூலம் அக்காக்கள் என்னை நன்றாக புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். அப்படி இல்லையென்றால் இந்த வழக்கு எங்களை பிரித்து விடும் என வருத்தத்துடன் பேசுகிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், ஜனனி பந்தக்கால் நடும் நிகழ்ச்சிக்கு வரமாட்டார் என அனைவரும் நினைத்து இருந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக நிகழ்ச்சிக்கு ஜனனி வருகிறார். அனைவருடனும் சேர்ந்து மகிழ்ச்சியாக பந்தக்காலை நடுகிறார். இதைப்பார்த்து கதிர், ஞானம் இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
அன்புக்கரசியின் திட்டம்: மறுபக்கம், தர்ஷன் மீட்டிங் இருப்பதற்காக திருச்சி செல்கிறார். ஆனால் மீட்டிங்கிற்கு சிலர் வராததால், அன்புக்கரசி மற்றும் தர்ஷன் இருவரும் மட்டுமே கலந்து கொள்வதற்காக செல்கின்றனர். அப்போது ஹோட்டலில் இருவரும் ஒரே அறை எடுத்து தங்குகின்றனர். அப்போது அன்புக்கரசி, இதற்கு முன் நமக்குள் இருந்த பழக்கத்தைப் பற்றி எல்லாம் நீ யோசிக்காதே. இப்போது நம்முடைய வேலைதான் முக்கியம். இந்த விஷயத்தைப் பற்றி வீட்டில் சொன்னால் நிச்சயமாக பிரச்சனை வரும். அதனால் இந்த விஷயத்தை நீ யாரிடமும் சொல்லாதே என்கிறார்.

சவால் விட்ட ஜனனி: மறுபக்கம், வழக்கறிஞர் குணசேகரனிடம் நாளைக்கு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அப்போது ஈஸ்வரி மாற்றிப் பேசிவிட்டால் மிகவும் பிரச்சினையாகிவிடும் என சொல்கிறார். ஆனால், குணசேகரன், ஈஸ்வரி மாற்றிப் பேச வாய்ப்பே இல்லை. நிச்சயமாக எனக்கு சாதகமாகத்தான் பேசுவார் என்கிறார். அதோடு, பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் ஈஸ்வரி, ஜனனியிடம் நம்ம குடும்பத்திற்கு ஆகாதவர்களுடன் சேர்ந்து கொண்டு இப்போது குடும்பத்திற்கு எதிராக நீ செயல்படுவது சரியில்லை ஜனனி. இந்த குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால், சில விஷயங்களை நாம் விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும். இந்த குடும்பத்தை அழிக்க நினைப்பவர்களுடன் நீ இருப்பது சரியில்லை என்று சொல்கிறார்.
ஆனால் ஜனனி, தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும், நான் நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பேன் என அதிரடியாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். பிறகு வீட்டில் சக்தி, ஜனனி இருவரும் நாளை வரவிருக்கும் வழக்கு குறித்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். இதற்கு அடுத்து என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications