குணசேகரன் எங்கே? நீதிபதியின் கேள்வியால் அதிர்ந்த குடும்பம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில், பந்தக்கால் நடும் நிகழ்ச்சியில் ஈஸ்வரி, ஜனனியிடம், நம்ம குடும்பத்திற்கு ஆகாதவர்களுடன் சேர்ந்து கொண்டு, இப்போது குடும்பத்திற்கு எதிராக நீ செயல்படுவது சரியில்லை ஜனனி. இந்த குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் சில விஷயங்களை நாம் விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும். இந்த குடும்பத்தை அழிக்க நினைப்பவர்களுடன் நீ இருப்பது சரியில்லை என்று சொல்கிறார்.
ஆனால் ஜனனி, தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும், நான் நிச்சயமாக அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பேன்" என அதிரடியாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
ஈஸ்வரி நீதிமன்றத்திற்கு கிளம்பிக்கொண்டிருக்கும்போது, விசாலாட்சி, வழக்கு எப்படியாக இருந்தாலும் ஜனனியை பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அவள் இந்த வீட்டின் வாரிசை சுமந்து கொண்டு இருக்கிறாள் என ஈஸ்வரியிடம் கூறி அனுப்புகிறார். இதைக்கேட்டு கதிர்,ஞானம் இருவரும் சண்டை போடுகின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், சாருபாலா, "ஈஸ்வரி எதற்காக இப்படி மாறிவிட்டார் என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு குணசேகரன் அவரை மாற்றி இருக்கிறார். ஈஸ்வரி எந்த முடிவு எடுத்தாலும் அதில் உறுதியாக இருக்கிறார். நீங்க நடந்த எல்லாத்தையும் சொல்லியும் அவர்களால் அதை நம்ப முடியவில்லை. அதைப் பார்த்து நீங்களும் மாறிவிடக்கூடாது என ஜனனியிடம் கூறுகிறார். அப்போது ஜனனி, எது எப்படி நடந்தாலும், இந்த வழக்கின் மூலம் எனக்கும் ஈஸ்வரி அக்காவிற்கும் இருக்கும் உறவு முறிந்தாலும் கூட, நான் நியாயத்தின் பக்கம்தான் நிற்பேன் என கூறுகிறார்.
குணசேகரன் எங்கே?: இதையடுத்து ஈஸ்வரி, கதிர், ஞானம் உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்திற்கு வருகின்றனர். அப்போது சக்தியை பார்த்த ஈஸ்வரி, உன்னிடம் இத்தனை நாட்களாக இருந்த குழந்தைத்தனம் இப்போது இல்லை. இது உன்னையே அழித்துவிடும் என எச்சரிக்கிறார். இதையடுத்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. அப்போது சாருபாலா, ஜாமீனில் வெளியே வந்த குணசேகரன் பல்வேறு அட்டூழியங்களில் ஈடுபட்டு இருக்கிறார் என வாதாடுகிறார். இதைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியே குணசேகரன் தான். அவர் எங்கே?" என கேட்கிறார். இதற்கு அடுத்து என்ன நடக்கிறது என்பதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்


Click it and Unblock the Notifications