நீதிமன்றம் முதல் கல்யாணம் வரை பரபரப்பு.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்தடுத்து ட்விஸ்ட்!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் சனிக்கிழமை எபிசோடில் ஈஸ்வரி, கதிர், ஞானம் உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்திற்கு வருகின்றனர். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. அப்போது சாருபாலா, ஜாமீனில் வெளியே வந்த குணசேகரன் பல்வேறு அட்டூழியங்களில் ஈடுபட்டு இருக்கிறார் என வாதாடுகிறார். இதைக்கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியே குணசேகரன் தான். அவர் எங்கே? என கேட்கிறார். மேலும், ஈஸ்வரியிடம், எதற்கான வழக்கு தேதியை மாற்ற வேண்டும் என கேட்டு, விசாரணை தேதியை வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கிறேன். நீங்க திருமண வேலையை பாருங்க என தீர்ப்பு அளிக்கிறார். அதைத்தொடர்ந்து சக்தியை பார்த்த ஈஸ்வரி, உன்னிடம் இத்தனை நாட்களாக இருந்த குழந்தைத்தனம் இப்போது இல்லை. இது உன்னையே அழித்துவிடும் என எச்சரிக்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில் நீதிமன்றத்தில் குணசேகரனுக்கு ஆதரவாக ஈஷ்வரி பேசியதை நினைத்து ஜனனி வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாள். அப்போது சக்தி அவளைச் சமாதானப்படுத்துகிறான். அந்த நேரத்தில் ஈஷ்வரியிடமிருந்து ஃபோன் வருகிறது. அதில், தர்ஷனுக்கு நாளை வீட்டிலேயே திருமண ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். நீ கட்டாயம் வந்துவிடு என்று சொல்கிறாள். இதைக்கேட்டு ஜனனிக்கு பதிலாக சக்தி ஆத்திரப்படுகிறான். உன்னை அழைத்து வா என அண்ணி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. என்னை மட்டும் வரச் சொல்கிறார்கள். வீட்டில் ஆணிடம் சொல்லிவிட்டால் போதும், பெண்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என சொல்கிறார்கள் என ஈஸ்வரி பேசியதை சொல்லி வருத்தப்படுகிறான்.

தர்ஷனின் திருமணம்: ஜனனி, நீ அவர்களுக்காகத்தான் இவ்வளவு கஷ்டப்படுறா. இப்போதுகூட அவர்களுக்காகத்தான் நீ போராடிக் கொண்டிருக்க. ஆனால் அது பற்றியெல்லாம் தெரியாமல் ஈஷ்வரி அண்ணி இப்படி நடந்துகொள்வது எனக்கு வருத்தமாக இருக்கு என கூறுகின்றான். அப்போது ஜனனி, ஈஸ்வரி அக்காவிற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை, அப்படி அவங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவந்தால் ரொம்ப வருத்தப்படுவாங்க, அந்த நாள் வரும் சக்தி, இப்படி எல்லாம் நடக்கும் என நமக்கு தெரியும் தானே என சொல்கிறாள்.
என்ட்ரி கொடுத்த ஜனனி: மறுபக்கம் வீட்டில் தர்ஷனின் திருமண ஏற்பாடுகளுக்கான அனைத்து வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. கரிகாலன், ஞானம், கதிர் அனைவரும் சேர்ந்து தர்ஷனுக்கு பட்டு வேட்டியை கட்டிவிட்டு கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கு வரும் ஈஸ்வரி தர்ஷனைப் பார்த்து உனக்கு பட்டு வேட்டி ரொம்ப அழகா இருக்குடா என மகனை பார்த்து ரசிக்கிறாள். அதே நேரத்தில் சக்தி திருமணத்திற்குச் செல்லாமல் இருப்பதைப் பார்த்த ஜனனி, கல்யாணத்திற்குப் புறப்படவில்லையா? என கேட்கிறாள். அதற்கு சக்தி, உனக்கு மரியாதை இல்லாத இடத்திற்கு நான் எப்படி போவேன்? எனக்கு நீ தான் ஜனனி முக்கியம் என்று சொல்கிறான். இதைக் கேட்டு ஜனனி மிகவும் எமோஷனலாகி சக்தியை கட்டிப்பிடித்து அழுகிறாள். பின் இருவரும் சேர்ந்து தர்ஷனின் கல்யாணத்திற்கு வர முடிவு செய்கின்றனர். இதைத் தொடர்ந்து சக்தி, ஜனனி இருவரும் குணசேகரன் வீட்டிற்கு வருகிறார்கள். இதை வெளியிலிருந்த குணசேகரன் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இப்படியான சூழ்நிலையில் எதிர்நீச்சல் சீரியல் முடிந்துள்ளது இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications