இந்த கல்யாணம் வேண்டாம்.. தாலி கட்டும் நேரத்தில் அதிர்ச்சி கொடுத்த பார்கவி.. பரபரக்கும் எதிர்நீச்சல்!
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷனின் திருமண ஏற்பாடுகளுக்கான அனைத்து வேலைகளும் நடந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் சக்தி திருமணத்திற்குச் செல்லாமல் இருப்பதைப் பார்த்த ஜனனி, கல்யாணத்திற்குப் புறப்படவில்லையா? என கேட்கிறாள். அதற்கு சக்தி, உனக்கு மரியாதை இல்லாத இடத்திற்கு நான் எப்படி போவேன்? எனக்கு நீ தான் ஜனனி முக்கியம் என்று சொல்கிறான். இதைக் கேட்டு ஜனனி மிகவும் எமோஷனலாகி சக்தியை கட்டிப்பிடித்து அழுகிறாள். பின் இருவரும் சேர்ந்து தர்ஷனின் கல்யாணத்திற்கு வர முடிவு செய்கின்றனர். இதைத் தொடர்ந்து சக்தி, ஜனனி இருவரும் குணசேகரன் வீட்டிற்கு வருகிறார்கள்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: சக்தியும் ஜனனியும் வீட்டிற்கு வந்ததை பார்த்த கதிர் கோவப்பட்டு உங்களை யார் வீட்டுக்கு வரச் சொன்னது? நான் சக்தியை மட்டும் தான் வரச் சொன்னேன். எதற்காக இந்த வீட்டிற்கு வந்தீர்கள்? என்று கதிர் ஜனனியிடம் ஆத்திரப்படுகிறார். அப்போது குணசேகரன் கதீரை சமாதானப்படுத்தி, நம்ம வீட்டில் நடக்கும் திருமணத்திற்காக வந்திருக்கிறார்கள், யாரும் எதுவும் பேசக்கூடாது என்று கூறி அவர்களை உள்ளே அழைத்துச் செல்கிறார். இதையடுத்து வீட்டில் திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெறுகிறது.

பார்கவி எடுத்த முடிவு: அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க தாலி கட்டும் நேரத்தில் பார்கவி திடீரென எழுந்து இந்த கல்யாணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார். இதைக் கேட்ட குணசேகரன் கோபத்தில், "எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பிறகு இப்படி சொன்னால் என்ன அர்த்தம்?" என்று கேட்கிறார். அதற்கு பார்கவி, எனக்கும் தர்ஷனுக்கும் ஒத்துவராது, நாங்கள் காதலித்தது உண்மைதான். ஆனால் எங்களுக்குள் இதுவரை எந்த ஒட்டுதலும் இல்லை. இதற்கு காரணம் இந்த வீட்டில் நடந்த விஷயங்களா இல்லை, எங்கள் இருவருக்குள்ளும் புரிதல் இல்லாததா என தெரிவில்லை. ஆனால், தர்ஷனுடன் என்னால் வாழ்க்கையை தொடர முடியாது என்று கண்கலங்கி சொல்கிறார்.
பார்கவியின் இந்த முடிவைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர். ஈஸ்வரி அதிர்ச்சியோடு பார்கவியை பார்த்துக்கொண்டிருக்க, தர்ஷனும் பேச முடியாமல் நிற்கிறார். இதனால் அந்த வீட்டில் பெரிய பரபரப்பு உருவாகிறது. இறுதியில் இந்த திருமணம் நடக்குமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்புடன் காட்சி முடிகிறது. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்றுபார்க்கலாம்.


Click it and Unblock the Notifications