உன்னுடன் வாழ முடியாது.. வீட்டை விட்டு வெளியேறிய பார்கவி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நேற்றைய எபிசோடில், அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க தாலி கட்டும் நேரத்தில் பார்கவி திடீரென எழுந்து இந்த கல்யாணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்று கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார். இதைக் கேட்ட குணசேகரன் கோபத்தில், "எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பிறகு இப்படி சொன்னால் என்ன அர்த்தம்?" என்று கேட்கிறார். அதற்கு பார்கவி, எனக்கும் தர்ஷனுக்கும் ஒத்துவராது, நாங்கள் காதலித்தது உண்மைதான். ஆனால் எங்களுக்குள் இதுவரை எந்த ஒட்டுதலும் இல்லை. இதற்கு காரணம் இந்த வீட்டில் நடந்த விஷயங்களா இல்லை, எங்கள் இருவருக்குள்ளும் புரிதல் இல்லாததா என தெரிவில்லை. ஆனால், தர்ஷனுடன் என்னால் வாழ்க்கையை தொடர முடியாது என்று கண்கலங்கி சொல்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: பார்கவியின் இந்த முடிவைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர். ஈஸ்வரி அதிர்ச்சியோடு பார்கவியை பார்த்துக்கொண்டிருக்க, தர்ஷனும் பேச முடியாமல் நிற்கிறார். அந்த நேரத்தில் அறிவுகரசி தன்னுடைய தங்கை அன்பரசியுடன் மாலையும் கழுத்துமாக வருகிறாள். இதைப் பார்த்த கதிர், எல்லாத்துக்கும் காரணம் ஜனனிதான். இவள்தான் அறிவுகரசியை இங்கே வரச் சொல்லி இருப்பாள் என்று கூறி ஜனனியை அடிக்கப் பாய்கிறார். அப்போது அவரை தடுத்து நிறுத்தும் பார்கவி, நான்தான் அவர்களை வரச் சொன்னேன் என்கிறாள்.
என்னால வாழமுடியாது: அப்போது வெளியில் இருந்த குணசேகரன், யார் அறிவுக்கரசியை இங்கே வர சொன்னது, அந்த பெண் அன்பு கல்யாண கோலத்தில் வேற இருக்கிறாளே? என்று கேட்கிறார். உடனே பார்கவி, ஆமாம், நான்தான் அவர்களை வரச் சொன்னேன் என்று கூறிவிட்டு தர்ஷனிடம் சென்று, இங்கு இருக்கும் அனைவரிடமும் ஒரு நல்ல உறவை உருவாக்கிக் கொள்ள முடியும். இனிமேலும் உங்களுடன் நல்ல உறவுமுறையில் இருக்க முடியும். ஆனால், உன்னுடன் ஒரு மனைவியாக என்னால் வாழ முடியாது தர்ஷா. அதனால் இந்த கல்யாணம் எனக்கு தேவையில்லை. உன் மீது ஆசைப்பட்டு, உன்னை விரும்பி, உனக்காக காத்துக் கொண்டிருப்பவள் அன்புரசிதான் என்கிறாள்.
வெளியேறிய பார்கவி: இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தர்ஷன், இல்லை பார்கவி... இனிமேல் உனக்கேற்ற கணவனாக நான் இருப்பேன் என்று கெஞ்சுகிறார். ஆனால், பார்கவி தன்னுடைய முடிவிலிருந்து சற்றும் மாறாமல் தன்னுடைய பட்டுப்புடவைகள், நகைகள் என அனைத்தையும் கழற்றி வைத்து, தனது பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அப்போது ஜனனி, உன்னுடைய முடிவை நான் மிகவும் பாராட்டுகிறேன். உனக்கு எது சரி, உனக்கு எது தேவை என்பதை நீயே முடிவு செய்து இருக்க பார்கவி, இது உண்மையிலேயே வரவேற்கப்பட வேண்டிய விஷயம் திரும்பி பாக்காம போ என சொல்கிறாள். இதையடுத்து பார்கவி அந்த வீட்டை விட்டு கிளம்புகிறார். இத்துடன் அந்த எபிசோடு முடிவடைகிறது


Click it and Unblock the Notifications