அலிபாபாவும் ஜனனியின் சவால்களும்.. ஈஸ்வரியை எதிர்த்த ஜனனியை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை: தாலி கட்டும் நேரத்தில் தர்ஷனை திருமணம் செய்ய முடியாது என்று பார்கவி சொன்னதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். தர்ஷன் எவ்வளவோ கெஞ்சியும், பார்கவி தன்னுடைய முடிவிலிருந்து சற்றும் மாறாமல், தன்னுடைய பட்டுப்புடவைகள், நகைகள் என அனைத்தையும் கழற்றி வைத்து, தனது பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அப்போது ஜனனி, "உன்னுடைய முடிவை நான் மிகவும் பாராட்டுகிறேன். உனக்கு எது சரி, உனக்கு எது தேவை என்பதை நீயே முடிவு செய்திருக்கிறாய்" என்கிறாள். இதையடுத்து பார்கவி வீட்டிலிருந்து வெளியேறுகிறாள்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், அறிவுக்கரசி ஈஸ்வரியின் காலில் விழுந்து கெஞ்சுகிறாள். "நான்தான் தவறு செய்தேன். என்னுடைய தங்கை எந்த விதமான தவறும் செய்யவில்லை. தர்ஷனுக்கும் அன்புக்கரசிக்கும் திருமணத்தை செய்து வையுங்கள்" என கெஞ்சுகிறாள். இதைப் பார்த்து திகைத்துப் போன ஈஸ்வரி, பதில் எதுவும் சொல்ல முடியாமல் அறிவுக்கரசியை இதே வீட்டில் தங்கும்படி சொல்கிறாள். அதைத் தொடர்ந்து ஜனனியிடம் வரும் ஈஸ்வரி, "இந்த வீட்டிற்கு நீ வந்தபோது உன்னிடம் மனிதாபிமானமும் கருணையும் இருந்தது. ஆனால் அது எல்லாம் இப்போது உன்னிடமிருந்து காணாமல் போய்விட்டது" என கோபத்துடன் சொல்கிறார்.

கடும் கோபத்தில் ஈஸ்வரி: உடனே ஜனனி, "அவையெல்லாம் காணாமல் போகவில்லை. இந்த வீட்டில் இருக்கும் தவறான மனிதர்கள் அதை புடுங்கி எரிந்து விட்டார்கள். இப்போது என்னிடம் இருப்பது என்னுடைய பலம் மட்டும்தான். அதை ஈகோ என்று நினைத்தால் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் என்னைப் பொருத்தவரைக்கும் அது என்னுடைய தன்னம்பிக்கை. இப்போது அறிவுக்கரசியையும் அவரது குடும்பத்தையும் இங்கு எந்த நம்பிக்கையில் நீங்கள் தங்க வைத்தீர்கள்? அதற்கு பெயர் மனிதாபிமானமா?" என்று கேட்கிறாள். அதற்கு ஈஸ்வரி, அதற்கெல்லாம் ஒரு காரணம் இருக்கிறது. அதை உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அது தப்பான முடிவாக இருந்தாலும், அது என்னுடைய முடிவு" என்கிறாள்.
சவால் விட்ட ஜனனி: இதைத் தொடர்ந்து பேசிய ஜனனி, உங்களுடைய வீட்டுக்காரரும் அவரோடு சேர்ந்து தவறு செய்தவர்களும் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காமல் நான் ஓயமாட்டேன். அது தூக்கு தண்டனையாக இருந்தாலும், அதை தடுக்க நான் எந்த முயற்சியும் செய்ய மாட்டேன். இந்த ஜனனியை பற்றி இன்று உங்களுக்கு தெரியாமலும் புரியாமலும் இருக்கலாம். ஆனால் ஒரு நாள் இல்லை ஒரு நாள் என்னைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நீங்களாக இருக்க வேண்டும் என்று தான் நான் ஆசைப்பட்டேன். ஆனால் அந்த ரேஸில் ஓடி ஓடி நான் என்னையே இழந்து விட்டேன். இனிமேல் நான் நானாக மட்டும் தான் இருப்பேன். யாருக்காகவும் எதற்காகவும் ஜனனி நியாயத்தை விட்டுக் கொடுக்க மாட்டார் என்கிறாள். இதையடுத்து அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
எதிர்நீச்சல் சீரியல் சீரியல் ஹீரோயினான ஜனனி செய்ததை பார்கவி செய்து அந்த வீட்டை விட்டே சென்றுவிட்டாள். ஆனால் ஜனனி இன்னும் சவால் மட்டுமே விட்டு வருவதால் கருப்பான போன்ஸ் அலிபாபாவும் ஜனனியின் சவால்களும் என்றும், ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி என ஜனனியை ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications