2 பெண்களை ஏமாற்றினியா?.. தர்ஷனை வெளுத்து வாங்கிய ஈஸ்வரி.. குணசேகரனை அழிக்க வந்த ராவணன்!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றை எபிசோடில் கோவத்துடன் பேசும் ஜனனி, உங்க வீட்டுக்காரரும் அவரோடு சேர்ந்து தவறு செய்தவர்களும் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்காமல் நான் ஓயமாட்டேன். அது தூக்கு தண்டனையாக இருந்தாலும், அதை தடுக்க நான் எந்த முயற்சியும் செய்ய மாட்டேன். இந்த ஜனனியை பற்றி இன்று உங்களுக்கு தெரியாமலும் புரியாமலும் இருக்கலாம். ஆனால் ஒரு நாள் இல்லை ஒரு நாள் என்னைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நீங்களாக இருக்க வேண்டும் என்று தான் நான் ஆசைப்பட்டேன். ஆனால் அந்த ரேஸில் ஓடி ஓடி நான் என்னையே இழந்து விட்டேன். இனிமேல் நான் நானாக மட்டும் தான் இருப்பேன். யாருக்காகவும் எதற்காகவும் ஜனனி நியாயத்தை விட்டுக் கொடுக்க மாட்டார் என்று அந்த வீட்டை விட்டு ஜனனி வெளியே வருகிறாள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், தர்ஷனை பார்த்து கோபப்படும் ஈஸ்வரி, வீட்டில் பார்கவி, ஆபீஸில் அன்புக்கரசியா? இரண்டு பெண்களையும் ஏமாற்றி வாழலாம் என நினைச்சியா என கடும் ஆத்திரத்தில் பேசுகிறாள். "இப்படி செய்வதற்கு உனக்கு என்ன தைரியம்? இப்படித்தான் நான் உன்னை வளர்த்தேனா? உங்கள் அப்பா எவ்வளவு மோசமானவராக இருந்தாலும் இதுபோன்ற தவறை அவர் செய்ததே இல்லை. நீ எப்படி இரண்டு பெண்களையும் ஏமாற்றின? என சொல்லி தர்ஷனை பயங்கரமாக அடிக்கிறாள். இதைப் பார்த்த வீட்டிலிருப்பவர்கள் அனைவரும் தடுத்து நிறுத்துகின்றனர்.
குணசேகரன் அழிய வேண்டும்: இதையடுத்து ஜனனி மற்றும் சக்தி இருவரும் வெளியே வந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது சக்தி, நிச்சயமாக இந்த வழக்கிலிருந்து குணசேகரன் வெளியே வருவதற்காக எது வேண்டுமானாலும் செய்வார். அண்ணியையே கேடயமாக அவர் பயன்படுத்துகிறார். அண்ணியும் அண்ணன் சொல்வதுதான் நியாயம், அதில்தான் உண்மை இருக்கிறது என அவருக்கு சாதகமாக பேசுகிறார்கள் என கூறுகிறார். இப்படி இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது, ராவணனிடமிருந்து ஜனனிக்கு ஃபோன் வருகிறது. அந்த ஃபோனை எடுத்துப் பேசும் ஜனனி யார் என்று கேட்கிறாள். அப்போது, ஏற்கனவே உனக்கு வீடியோவை அனுப்பியது நான் தான் என்று சொல்கிறான்.
இதைக்கேட்டு கோவப்படும் ஜனனி, அன்றைக்கு வீடியோவை அனுப்பிவிட்டு டெலிவரி செய்தது நீதானா? என கேட்கிறாள். அதற்கு அவர், உனக்கு நான் யார் என்று தெரிய வேண்டுமா? எதற்காக இப்படிச் செய்கிறேன் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? உனக்கும் எனக்கும் ஒரே ஒரு எதிரி தான் அது குணசேகரன். குணசேகரன் அழிய வேண்டும் என கூறுகிறார். இதைக்கேட்டு ஜனனி,சக்தி இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்றுபார்க்கலாம்.


Click it and Unblock the Notifications