குணசேகரன் மட்டும் இல்ல.. குடும்பமே அழியணும்..தர்ஷினி சாட்சி சொல்லக்கூடாது? எதிர்நீச்சல்!
சென்னை: ஜனனிக்கு ராவணன் ஃபோன் செய்த நிலையில், ஜனனி கோவத்துடன் வீடியோவை அனுப்பிவிட்டு டெலிவரி செய்தது நீதானா? என கேட்கிறாள். அதற்கு அவர், உனக்கு நான் யார் என்று தெரிய வேண்டுமா? எதற்காக இப்படிச் செய்கிறேன் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? உனக்கும் எனக்கும் ஒரே ஒரு எதிரி தான் அது குணசேகரன். குணசேகரன் அழிய வேண்டும் என கூறுகிறார். இதைக்கேட்டு ஜனனி,சக்தி இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
இதையடுத்து ராவணன், குணசேகரனோட வீடியோ என்கிட்ட இருக்குது. அந்த வீடியோ ஆதாரம் கிடைத்தால்தான் குணசேகரனை உள்ளே தள்ள முடியும். கூடிய சீக்கிரம் அந்த வீடியோ உங்களை தேடி வரும் என கூறிவிட்டு ராகவன் ஃபோனை கட் செய்கிறார். இதையெல்லாம் கவனித்து கொண்டிருக்கும் லக்ஷ்மணனை பார்த்து என்ன லக்ஷ்மண், அந்த வீடியோவை அவங்களிடம் கொடுத்துரலாமா? என கேட்கிறார் ராவணன். அதற்கு லக்ஷ்மணன், அந்த வீடியோவை கொடுத்தால் மட்டும் குணசேகரன் அழிந்துவிடுவாரா? என கேட்க, உடனே ராவணன்,"குணசேகரனை மட்டும் அழிப்பது என்னுடைய நோக்கம் இல்லை. ஒட்டுமொத்த அந்த குடும்பத்தையும் நான் அழிக்கணும். அதுதான் என்னுடைய நோக்கம் என கோபமாக கூறுகிறார். அப்படின்னா அந்த வீடியோவை கொடுத்து விடுவீர்களா? என லக்ஷ்மணன் மீண்டும் கேட்க, அதுதான் சஸ்பென்ஸ் என மர்மமாக பதில் அளிக்கிறார் ராவணன்.

தர்ஷினியின் முடிவு: அதே நேரத்தில் வீட்டில் தர்ஷன் மீது கோவத்தில் இருக்கும் ஈஸ்வரி, அன்புகரசிக்கு என்ன சொல்ல போற, என்ன சொல்லி அவங்களை இந்த வீட்டை அனுப்பபோற என கேட்கிறாள். அப்போது அன்புகரசி, "நானும் தசனனும் ஒன்றாக ஹோட்டலில் தங்கியிருந்தோம். அப்போது என்ன நடந்தது தெரியுமா? அவன் முழுக்க பார்கவி பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தான் என கூறி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்கிறார். இதையடுத்து சதிர், அந்த ஜனனியால் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. இதில் என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை. இதில் வேற யாராவது மாற்றி சாட்சி சொல்லிவிட்டால் பெரிய பிரச்சனையாகிவிடும்' என பதற்றத்துடன் கூறுகிறார். இப்படி பல திருப்பங்களுடன் நகரும் இந்த விவகாரத்தில் அடுத்ததாக என்ன நடக்கப்போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications