உண்மை வெளிவரும் பயம்.. தர்ஷினியை கடத்தியது யார்? எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் நேற்றைய எபிசோடில், தர்ஷன் மீது கோபமாக இருக்கும் ஈஸ்வரி அவனை அடித்துவிட்டு, "அன்புகரசிக்கு என்ன சொல்லப் போற? அவர்களை இந்த வீட்டில் எப்படி அனுப்பப் போற?" என கேட்கிறாள். அப்போது அன்புகரசி, "நானும் தர்ஷனும் ஒன்றாக ஹோட்டலில் தங்கியிருந்தோம். அப்போது என்ன நடந்தது தெரியுமா? அவன் முழுக்க பார்கவி பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தான்" என கூறி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இதையடுத்து கதிர், அந்த ஜனனியால் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. இதில் என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை. இந்த வழக்கில் வீட்டில் இருக்கும் அனைவரும் வந்து சாட்சி சொல்ல வேண்டும். ஆனால், இந்த ஜனனி அனைவரின் மண்டையையும் கழுவி வைத்திருக்கிறார். கோர்ட்டுக்கு வந்து மாற்றிச் சாட்சி சொல்லிவிட்டால் பெரிய பிரச்சனையாகிவிடும். அதனால் யாரும் கோர்ட்டுக்கு வராமல் இருந்தால் போதும்" என சொல்கிறார்.

சாட்சி சொல்ல முடிவு செய்த தர்ஷினி: அப்போது தர்ஷினி, அது எப்படி சித்தப்பா? இந்த வழக்கில் நானும் ஒரு சாட்சிதான். நான் நிச்சயமாக கோர்ட்டுக்கு போய் சாட்சி சொல்லுவேன்" என கூறுகிறாள். தர்ஷினி பேசியதை கேட்டு குணசேகரன் கோபமாகக் கத்துகிறார். உடனே ஈஸ்வரி, குணசேகரனை சமாதானப்படுத்திவிட்டு, "இது பெரியவர்களின் விஷயம். தேவையில்லாமல் இதில் நீ வராதே" எனக் கூறி தர்ஷினியை அங்கிருந்து அனுப்புகிறாள். மற்றொரு பக்கத்தில் சாருபாலா, "நாம் இப்போது எந்தவிதமான சாட்சியும் ஆதாரமும் இல்லாமல் இருக்கிறோம். அந்த நீதிபதிக்கு தேவையானது சாட்சி மட்டும்தான். அதனால் சாட்சி இல்லாமல் நம்மால் எதுவும் செய்ய முடியாது" என சொல்கிறார். மேலும், "இந்த வழக்கில் தர்ஷினி சாட்சி சொன்னால் நிச்சயமாக அது நமக்கு சாதகமாக அமையும்" என்றும் கூறுகிறார்.
கடத்தப்பட்ட தர்ஷினி: இதையடுத்து ஜனனி, தர்ஷினிக்கு போன் செய்து, "நாளைக்கு வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதில் உன்னுடைய சாட்சி இருந்தால் நன்றாக இருக்கும்" என சொல்கிறாள்.அதற்கு தர்ஷினி, "ஆமாம் சித்தி... ஆனால் வீட்டில் நடப்பதைப் பார்த்தால் என்னை சாட்சி சொல்ல விடமாட்டார்கள் போல தெரிகிறது" என கூறுகிறாள். உடனே ஜனனி, "அங்கு இருக்க முடியவில்லை என்றால், நீ இங்கே வந்துவிடு" என சொல்கிறார்.
இதையடுத்து தர்ஷினி, யாரிடமும் சொல்லாமல் வீட்டிலிருந்து கிளம்பி காரில் ஜனனியின் வீட்டுக்கு வருகிறார். ஆனால் பாதி வழியிலேயே தர்ஷினி கடத்தப்படுகிறார். தர்ஷினி நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்தால் உண்மை வெளிவரும் என்பதால், திட்டமிட்டு அவரை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் ஜனனிக்கும் சாருபாலாவுக்கும் வருகிறது.இதையடுத்து என்ன நடந்தது என்பதை அடுத்த எபிசோடில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications