தர்ஷினியை கடத்தியது யார்? நீதிமன்ற ரகசியத்தை மறைக்க நடந்த கடத்தல்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் நேற்றைய எபிசோடில், ஜனனி தர்ஷினிக்கு ஃபோன் செய்து, "நாளைக்கு வழக்கு விசாரணை வருகிறது. இதில் நீ சாட்சி சொன்னால் நல்லதாக இருக்கும் என்று சாருபாலா மேடம் கூறுகிறார். நீதிமன்றத்திற்கு வர முடியுமா?" என்று கேட்கிறார். அதற்கு தர்ஷினி, "வரேன் சித்தி. ஆனால் வீட்டில் நடப்பதை பார்த்தால் என்னை சாட்சி சொல்ல விடமாட்டார்கள் போல தெரிகிறது. நந்தினி, ரேணுகா சித்தி கூட சித்தப்பாவின் பேச்சை கேட்டு நடக்கிறார்கள்" என்கிறாள்.
உடனே ஜனனி, "அந்த வீட்டில் உன்னால் இருக்க முடியவில்லை என்றால், நீ இங்கே வந்துவிடு" என்று கூறுகிறார். இதையடுத்து, யாரிடமும் சொல்லாமல் தர்ஷினி வீட்டிலிருந்து கிளம்பி, காரில் ஜனனியின் வீட்டிற்கு செல்கிறாள். ஆனால் பாதி வழியிலேயே தர்ஷினி கடத்தப்படுகிறாள். தர்ஷினி நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்தால் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்பதால், திட்டமிட்டு அவரை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் ஜனனிக்கும் சாருபாலாவுக்கும் ஏற்படுகிறது.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், தர்ஷினி எங்கே சென்றாள் என்று தெரியாமல் சக்தியும் ஜனனியும் பதற்றத்தில் இருக்கிறார்கள். "அவள் எந்த வண்டியில் ஏறினாள்? அவளுக்கு என்ன ஆனது?" என்று குழப்பத்தில் தவிக்கின்றனர். அந்த நேரத்தில் வேகமாக ஒரு கார் வர, அதில் தர்ஷினி இருப்பாளோ என்று ஆவலுடன் பார்க்கிறார்கள். ஆனால் அந்த காரிலும் தர்ஷினி இல்லாததால் ஜனனி மேலும் அதிர்ச்சி அடைகிறாள். மற்றொரு பக்கம் வீட்டில், ஈஸ்வரி தர்ஷினிக்கு ஃபோன் செய்கிறாள். ஆனால் போன் ஸ்விட்ச் ஆஃப் என வருகிறது. உடனே தர்ஷினியின் தோழிக்குப் போன் செய்து, "அவ ஹாஸ்டலுக்கு வந்தாளா? அவளிடம் போனை கொடு" என கேட்கிறாள். அதற்கு, "ஆண்டி, அவ இங்கு வரவில்லை" என்று சொன்னதும் ஈஸ்வரி பதற்றமடைகிறாள்.
தர்ஷினியை கடத்தியது யார்?: இந்த விஷயத்தை உடனே குணசேகரனிடம் கூறும் ஈஸ்வரி, "தர்ஷினி ஹாஸ்டலில் தங்கப் போவதாக சொல்லிவிட்டு கிளம்பினாள். ஆனால் அங்கு போகவில்லை. போனும் ஸ்விட்ச் ஆஃப் ஆக இருக்கிறது" என்கிறாள். அப்போது கரிகாலன், "தர்ஷினி ஹாஸ்டலுக்கு போகவில்லை. அவ ஜனனி சித்தியை பார்க்கத்தான் போயிருக்காங்க. அவர்கள் இருவரும் போனில் பேசிக்கொண்டதை நான் கேட்டேன்" என்று சொல்கிறான். இதையடுத்து நந்தினி, ஜனனிக்கு ஃபோன் செய்து, "தர்ஷினி அங்கு வந்தாளா? ஈஸ்வரி அக்காவிடம் ஹாஸ்டலுக்கு போவதாக சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறாள். ஆனால் அங்கு போகவில்லை. கரிகாலன் உன்னை பார்க்கத்தான் சென்றதாக சொல்கிறான். அதனால் தான் கேட்டேன்" என்கிறாள்.
சீரியலில் பரபரப்பு: அதற்கு ஜனனி, "ஆமாம், தர்ஷினி இங்கேதான் வந்திருக்கிறாள். கொஞ்சம் அசதியாக இருந்ததால் ஓய்வு எடுத்து வருகிறாள்" என்று பொய் சொல்லிவிட்டு போனை துண்டிக்கிறாள். இதனால் அதிர்ச்சி அடையும் சக்தி, "தர்ஷினி எங்கே இருக்கிறாள் என்று தெரியாத நிலையில், எதற்காக பொய் சொன்னாய்?" என்று கேட்கிறார். அதற்கு ஜனனி, "இந்த நேரத்தில் தர்ஷினியை காணவில்லை என்று சொன்னால் வீட்டிலுள்ளவர்கள் எல்லோரும் பயந்து விடுவார்கள். அதனால்தான் அப்படி சொன்னேன்" என்கிறாள். இதனால் தர்ஷினியை உண்மையில் கடத்தியது யார்? நீதிமன்ற சாட்சியை தடுக்க யார் திட்டமிட்டுள்ளனர்? என்ற பரபரப்பான கேள்விகளுடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.


Click it and Unblock the Notifications