தர்ஷினியை துரத்தும் ஆபத்து.. சரிந்து விழுந்த ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தர்ஷினி காணாமல் போனதற்கு காரணம் ஜனனி தான் என போலீஸ் முன்பு ஈஸ்வரி கூறுகிறாள். அதோடு மட்டுமல்லாமல், சக்தி,ஜனனி இருவரும் வீட்டை விட்டு வெளியில் சென்றால் அரசு, மதிவதனியுடன் கூட்டு சேர்ந்து என்னுடைய பெண் தர்ஷினிக்கு ஏதாவது பிரச்சனை செய்து விடுவார்கள். அதனால் இவர்கள் இந்த வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என கதிர் சொல்ல, வேறு வழியே இல்லாமல் சக்தி, ஜனனி இருவருமே குணசேகரன் வீட்டிலேயே தங்குகின்றனர்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், தர்ஷினி வீட்டுக்கு வராததால் பதற்றத்தில் இருக்கும் ஈஸ்வரி, பூஜை அறையிலேயே கடவுளை வேண்டும்படி கதறி அழுது கொண்டு இருக்கிறாள். அப்போது, அங்கு வரும் குணசேகரன், நீ எதற்காக இப்படி கவலைப்படுகிற ஈஸ்வரி எழுந்து வந்து சாப்பிடு என அழைக்கிறார். ஆனால், ஈஸ்வரி பிடிவாதமாக இருக்கிறார். நான் செய்த பாவத்திற்காக தான், நம்முடைய பெணு இப்படி கஷ்டப்படுகிறாள் என நினைக்கும் போது எனக்கு வேதனையாக இருக்கு,. தர்ஷினியை யார் எங்கு கடத்தி வைத்திருந்தாலும், யார் மறைத்து வைத்திருந்தாலும் என் மகள் தர்ஷினியை நான் கண்டுபிடித்து உன் முன்னாடி நிறுத்துகிறேன் என குணசேகரன் சவால் விட்டுவிட்டு செல்கிறார்.

மயங்கி விழும் ஈஸ்வரி: மறுபக்கம் ஜனனி பதற்றத்தோடு இருப்பதை பார்த்த சக்தி, எதற்காக இப்படி பயப்படுகிறாய் ஜனனி? தர்ஷினிக்கு எதுவும் ஆகி இருக்காது. நிச்சயமாக இதற்குப் பின்னால் வேறு யாரோ இருக்கிறார்கள். நான் தர்ஷினி கல்லூரிக்கு சென்று தர்ஷினி பற்றி விசாரித்து விட்டு வருகிறேன். நீ எது வேண்டுமானாலும் எனக்கு ஃபோன் செய். நான் உனக்கு ஆர்டர் போட்டு தருகிறேன். தயவுசெய்து கீழே போகாதே. கீழே போனால் தேவையில்லாத பிரச்சனை வரும் என என சொல்லிவிட்டு சக்தி கீழே வருகிறான்.
அதே நேரம் பூஜை அறையில் இருந்து மயக்கத்துடன் வரும் ஈஸ்வரி, தர்ஷினி பெயரையே சொல்லிக்கொண்டே புலம்பி அழுகிறாள். மகளை பார்க்காத வேதனையில் இருக்கும் ஈஸ்வரி திடீரென சரிந்து கீழே விழ, சக்தி பதறியடித்து ஓடி வந்து தூக்குகிறான். அதே நேரம் குணசேகரனும் பதறிப் போகிறான். ஒட்டுமொத்த குடும்பமும் ஈஸ்வரியின் நிலைமையை பார்த்து பதறுகின்றனர்.


Click it and Unblock the Notifications