குணசேகரன் மட்டுமல்ல... கதிர், ஞானமும் தப்பிக்க முடியாது.. ஜனனி எச்சரிக்கை.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய எபிசோடில், தர்ஷினி காணாமல் போனதால் மனவேதனையில் இருந்த ஈஸ்வரி, பல நாட்களாக சரியாக சாப்பிடாமல் சாமி அறையிலேயே அழுதுக்கொண்டே இருந்த காரணத்தால் திடீரென மயங்கி கீழே விழுந்துவிடுகிறார். இதைப் பார்த்து குணசேகரன், நந்தினி, ரேணுகா உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்து பதற்றமடைகிறார்கள்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: இன்றைய எபிசோடில், ஈஸ்வரியின் நிலையைப் பார்த்த குணசேகரன், எப்படியாவது தர்ஷினியை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வருவேன். அவளுக்கு என்னை பிடிக்காவிட்டாலும் அவள் என் மகள். அவளை நான் கைவிட மாட்டேன் என்று உறுதியளிக்கிறார். அதன்பின் தனது தம்பிகளை பல இடங்களில் தேடச் சொல்லி அனுப்புகிறார். சக்தியும் ஈஸ்வரியின் நிலையை பார்த்து வேதனை அடைந்து தர்ஷினி பற்றி விசாரிப்பதற்கான கல்லூரிக்கு செல்கிறான்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

கோவப்பட்ட ஜனனி: மறுபுறம், ஜனனி சாப்பிடாமல் இருப்பதை பார்த்த நந்தினி ஜனனியிடம், உன் கோபத்தை சாப்பாட்டின் மீது காட்டாதே. நீ கர்ப்பமாக இருப்பதால் சாப்பிடாமல் இருந்தால் அது உன் குழந்தைக்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறாள். ஆனால், ஜனனி பதில் சொல்லாமல் அமைதியாக இருந்ததால் நந்தினி கோபமடைந்து, நாங்கள் உனக்காக எவ்வளவோ செய்தோம். அதற்கான மரியாதை இதுதானா? என்று கேட்கிறார். இதைக் கேட்டதும் ஆத்திரப்படும் ஜனனி, குணசேகரன் என்னையும் சக்தியையும் கொல்ல பார்த்தார். இருவருக்கும் ஏராளமான பிரச்சனைகளை கொடுத்தார்.

Ethirneechal Thodargiradhu Suntv promo

தண்டனை வாங்கி தருவேன்: சக்தியை நான் தான் கடத்தினேன் என அவர் வாயால் சொன்னதை நீங்களும் கேட்டீங்க தானா. அப்படி இருந்தும், நீங்க எங்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை. இந்த வீட்டில் நடந்த அனைத்தும் பிரச்சனைகளும் உங்களுக்கு தெரிந்திருந்தும், எங்களுக்கு ஆதரவாக ஏன் நீதிமன்றத்தில் வந்து சாட்சி சொல்லவில்லை. ஏன் என்றால், குணசேகரன் உங்களுக்கு முக்கியம். கதிர், ஞானம் யாராவது என்னைக்காவது குணசேகரன் செய்வது தப்பு என்று சொல்லி இருக்காங்களா? ஏன் சொல்லவில்லை, அப்படி சொன்ன இந்த சொத்து அவங்களுக்கு கிடைக்காது. அதற்காகத்தான் யாரும் எதுவும் சொல்வது இல்லை.ஆனால், எனக்கு அப்படி இல்லை, குணசேகரன் A1, கதிர், ஞானம் என அனைவருக்கும் தண்டனை கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன் என்று ஜனனி உறுதியாக கூறுகிறார்.
இதனால் வீட்டில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகிறது. அடுத்து தர்ஷினி பற்றிய தகவல் ஏதேனும் கிடைக்குமா, ஜனனியின் இந்த முடிவுக்கு குடும்பத்தினர் எப்படி பதிலளிப்பார்கள் என்பது அடுத்த காட்சிகளில் தெரியவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X