உனக்கு புள்ள நல்லபடியாக பொறக்குமா? ஜனனிக்கு சாபம் விட்ட ஈஸ்வரியின் அப்பா.. தர்ஷினி காதலனுடன் மாயமா?
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது நேற்றைய எபிசோடில், நந்தினியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் ஜனனி, நீங்க எங்களுக்கு ஆதரவாக நிற்கவில்லை. இந்த வீட்டில் நடந்த அனைத்தும் பிரச்சனைகளும் உங்களுக்கு தெரிந்திருந்தும், எங்களுக்கு ஆதரவாக ஏன் நீதிமன்றத்தில் வந்து சாட்சி சொல்லவில்லை. ஏன் என்றால், குணசேகரன் உங்களுக்கு முக்கியம். கதிர், ஞானம் யாராவது என்னைக்காவது குணசேகரன் செய்வது தப்பு என்று சொல்லி இருக்காங்களா? அப்படி சொன்னா இந்த சொத்து அவங்களுக்கு கிடைக்காது. அதற்காகத்தான் யாரும் எதுவும் சொல்வது இல்லை. குணசேகரன் தான் A1, கதிர், ஞானம் என அனைவருக்கும் தண்டனை கிடைக்கும் வரை நான் ஓயமாட்டேன் என்று ஜனனி உறுதியாக கூறுகிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: தர்ஷினி பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமா என தேடிக்கொண்டு இருக்கும் சக்தி, தர்ஷனின் நண்பரைத் தேடி செல்கிறார். ஆனால் அங்கு சென்றபோது தான் அந்த நண்பரையும் காணவில்லை என்று ஹாஸ்டல் நிர்வாகம் தெரிவிக்கிறது. இதைக் கேட்டு சக்தி அதிர்ச்சி அடைகிறார். உடனே இந்த தகவலை ஜனனியிடம் கூறுகிறார். அப்போது ஜனனி, தர்ஷினி காணாமல் போனதற்கும் நண்பர் திடீரென மாயமானதற்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகம் இருப்பதாக சொல்கிறார்.

ஈஸ்வரி, ஜனனி மோதல்: இருவரும் இதுகுறித்து தீவிரமாக பேசிக் கொண்டிருக்கும்போது, ஈஸ்வரியின் தந்தை வீட்டிற்கு வந்து ஜனனியிடம் கடுமையாக வாக்குவாதம் செய்கிறார். என்னுடைய பேத்தி உன் பேச்சைக் கேட்டுதான் வீட்டை விட்டு சென்றாள். இப்போது அவள் வீடு திரும்ப வரவில்லை, எங்கு போனால் என்ன ஆனால், உயிரோடு தான் இருக்காளா என்று கூட தெரிவில்லை. ஆனால், நீங்க ஜோடி சந்தோஷமா இருக்கீங்க, என்னுடைய பேத்தி மட்டும் வரவில்லை என்றால் நான் உயிரை மாய்த்துக் கொள்வேன். என் சாவுக்கு காரணம் நீ தான், உனக்கெல்லாம் எப்படி நல்லபடியாக குழந்தை பிறக்கும்? என்று கோபமாக பேசுகிறார்.
இதனால் ஆத்திரமடைந்த சக்தி, இதுக்கு மேல ஜனனி பற்றி ஏதாவது பேசுனீங்க என்றால் அவ்வளவு தான். மரியாதையாக வீட்டை விட்டு வெளியே போங்க என கோவத்தில் கத்துகிறார். அப்போது ஈஸ்வரி, என் அப்பாவை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்ல உனக்கு எந்த உரிமையும் இல்லை, அவர் சொல்வதில் எந்தவிதமான தவறும் இல்லை அவர் உண்மையைத் தான் சொல்கிறார் என ஈஸ்வரி சொன்னதை கேட்டு ஜனனி கண்கலங்குகிறாள். இதனால் வீட்டில் பெரிய வாக்குவாதம் வெடிக்கிறது.

தர்ஷினி காதலித்தாலா: அந்த நேரத்தில் தர்ஷனின் நண்பரின் மாமா வீட்டிற்கு வந்து, உங்களுடைய மகள் தர்ஷினியும் என்னுடைய மருமகனும் ஒருவரையொருவர் பழகி வந்தார்கள். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அவனையும் காணவில்லை என்று கூறுகிறார். இந்த தகவலைக் கேட்டு ஈஸ்வரி மற்றும் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் ஆழ்கின்றனர். தர்ஷினியும் தர்ஷனும் சேர்ந்து சென்றார்களா? அல்லது இவர்களின் மாயத்திற்கு பின்னால் வேறு ஏதாவது மர்மம் இருக்கிறதா? என்ற கேள்விகளுடன் அடுத்த கட்ட கதை நகர்கிறது. அடுத்த எபிசோடில் இந்த மர்மத்திற்கு என்ன பதில் கிடைக்கிறது என்பதைப் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications