எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகைகளின் சம்பளம்.. யாருக்கு அதிக சம்பளம் தெரியுமா?
சென்னை: சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அனைவருக்கும் பிடித்த சீரியலில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலை திருசெல்வம் அவர்கள் இயக்கி வருகிறார். பெண்கள் வீட்டுக்குள் சமையல் அறையில் மட்டும் ஆதிக்க செலுத்தாமல், அவங்க நினைச்சா எந்த உயரத்தையும் அடையலாம் என்பதை சீரியலில் அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் திருசெல்வம். எதிர்நீச்சல் சீரியல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவடைந்த நிலையில், இரண்டாம் பகுதி எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற பெயரில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் முதல் சீசனில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீசனிலும் நடித்து வருகின்றனர். ஆனால், ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வந்த மதுமிதாவிற்கு பதிலாக பார்வதி அந்த ரோலில் நடித்து வருகிறார். அந்த சீரியலில் இவரின் கதாபாத்திரம் தான் அழுத்தமான கதாபாத்திரமாக இருந்த நிலையில், மதுமிதா மாற்றப்பட்டதால், பார்வதியை மக்கள் ஏற்றுக்கொள்வார்களா என்கிற தயக்கம் இருந்தது. ஆனால், மதுமிதாவிற்கு கிடைத்த அதே வரவேற்பு தற்போது பார்வதிக்கும் கிடைத்து வருகிறது. இந்த சீரியலில் நடித்து வரும் நடிகர், நடிகைகளின் சம்பளம் எவ்வளவு என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: சன் டிவியில் தினமும் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், வேலன் ராமமூர்த்தி, பார்வதி, கனிஹா, பிரியதர்ஷினி,ஹரிப்ரியா, விபு, சபரி, கமலேஷ், சத்தியப்ரியா, பாம்பே ஞானம், ரித்திக் ராகவேந்திரா ஆகியோர் நடித்து வருகின்றனர். பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், தற்போது தர்ஷனின் கல்யாண விவகாரம் சென்று கொண்டு இருக்கிறது. அன்புக்கரசியை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாத தர்ஷன், வீட்டை விட்டே தப்பு ஓடிவிட்டான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்,.
சம்பளம்: இந்த நேரத்தில் இதில் நடித்து வருபவர்களின் சம்பளத்தை தெரிந்து கொள்ளலாம். ஜனனிக்கு ஒரு நாளைக்கு 12 ஆயிரமும், ஈஸ்வரி ரோலில் நடித்து வரும் நடிகை கனிகாவிற்கு ரூ15 ஆயிரம். பைவ் ஸ்டார் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர்,நடிகையாக மட்டுமில்லாமல் டப்பிங் கலைஞராகவும் உள்ளார். இவர் அஜித் நடித்த வரலாறு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதே போல, பிரபல தொகுப்பாளினியாக இருக்கும் டிடியின் அக்காவான பிரியதர்ஷினிக்கு ஒரு நாளைக்கு ரூ.13 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. ஹரிப்பிரியா இசைக்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. இதில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகையாக நடிகை கனிகா இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











