ரோஜா சீரியல் ஹீரோவுக்கு திடீர் திருமணம்?.... அதிர்ச்சியில் ரசிகைகள் !

சென்னை : சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் ஹீரோ சிபு சூர்யன் திடீரென திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இணையத்தில் வெளியாகி உள்ள இந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சிபு, பரவி வரும் இந்த தகவல் குறித்து கருத்து தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது ரசிகர்களை மேலும் குழுப்பமடையச் செய்துள்ளது.

சீரியல் பிரியர்கள்

சீரியல் பிரியர்கள்

திரைப்படங்களை விட சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. எத்தனை நாள் பார்த்த படத்தையே மீண்டும் மீண்டும் பார்ப்பது என்று அலுத்துக் கொள்பவர்களுக்கு சீரியல் வரப்பிரசாதமாக உள்ளது. சீரியலில் வரும் திடீர் திடீர் திருப்பங்களை இல்லத்தரசிகள் முதல் அனைத்து வயதினர் வரை அனைவரும் ரசித்து ரசித்து பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

பல தொடர்கள்

பல தொடர்கள்

சன்தொலைக்காட்சி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என இன்னும் எத்தனையோ தொலைக்காட்சிகள் விதவிதமான தொடர்களை ஒளிபரப்பினாலும். அத்தனை சீரியலுக்கும் என்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

ரோஜா சீரியல்

ரோஜா சீரியல்

அப்படி மக்களின் மனதில் நின்றத் தொடர் தான் ரோஜா. சன் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடர் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. 900 எபிசோடுகளைக் கடந்து சின்னத்திரையில் அதிக எபிசோடுகளை கடந்த தொடர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடம்

டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடம்

இந்த தொடரில் சிபு சூர்யன், பிரியங்கா நல்கார், வெங்கட் ரங்கநாதன், ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி,வடிவுக்கரசி, சிவா, ராஜேஷ் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டிஆர்பி ரேட்டிங்கில் இத்தொடர் எப்போதும் முதல் நடத்திலேயே உள்ளது. ரோஜா சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடிக்கும் அர்ஜுனுக்கும், ரோஜா கேரக்டரில் ஹீரோயினாக நடிக்கும் பிரியங்கா நல்காருக்கும் இணையத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

ஹீரோவுக்கு திடீர் திருமணம்?

ஹீரோவுக்கு திடீர் திருமணம்?

இந்நிலையில், நடிகர் சிபு சூர்யாவுக்கு திருமணம் நடந்து முடிந்து விட்டதாக தகவல்கள் வேகமாக பரவி வருகின்றனர். இதனால் , இணையத்தில் அவரின் ரசிகர்கள், வாழ்த்துக்கள் அர்ஜுன் என்றும், அண்ணனுக்கு வாழ்த்துக்கள் என்றும், தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறிவருகின்றனர். திடீரென வெளியாகி உள்ள இந்த தகவலால் ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

வலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சிபு சூர்யன் தற்போது கூட ஒரு பதிவை போட்டுள்ளார் அதில் என்னை யாரும் விரும்பவில்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்,எப்போதும் என்னைப்போல யாரும் இல்லை என்று சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். இந்த பதிவிற்கும் ரசிகர் ஒருவர், புது மாப்பிள்ளை, முகத்தை பார்த்த கல்யாணம் ஆன மாதிரி தெரியல இருந்தாலும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டுள்ளார். ஆனால், சிபு எந்த கேள்விக்கும் ரிப்ளை பண்ணாமல் அமைதியாகவே உள்ளார். இதனால், அவரது ரசிகர்கள் குழப்பி போய் உள்ளனர். குறிப்பாக பெண் ரசிகைகள் கவலை அடைந்துள்ளனர். சாக்லேட் பாய் போல இருக்கும் சிபு சூர்யா இணையத்தில் ஏகப்பட்ட பெண் ரசிகைகளை பெற்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X