twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "நச்சு"ன்னு ஹிட்டான நாகினி.. டப்பா டப்பாவாக டப்பிங் சீரியல்களை களம் இறக்கும் சன்!

    By Mayura Akilan
    |

    சென்னை: சன் டிவியில் ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி வரும் டிவி சீரியல்களையும், போரடிக்கும் சீரியல்களையும் நிறுத்தி விட்டு விறுவிறுப்பான டப்பிங் சீரியல்களை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தனியார் டிவி சேனல்களில் முதன்மை இடத்தில் உள்ள சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளன. 18 தமிழ் சீரியல்கள் சன்டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன.

    ஞாயிறன்று 'ஜெய் ஹனுமான்' என்ற டப்பிங் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இது குட்டீஸ்களிடையே வரவேற்பினை பெற்றுள்ளது.

    நாகினி பாம்பு சீரியல்

    நாகினி பாம்பு சீரியல்

    திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு நாகினி என்ற டப்பிங் சீரியலை ஒளிபரப்பி வருகிறது சன்டிவி. இந்த சீரியலில் உள்ள பிரம்மாண்டம் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கையும் பிடித்துள்ளதாம்.

    டப்பிங் சீரியல்கள்

    டப்பிங் சீரியல்கள்

    ஜெயாடிவி, பாலிமர்டிவி, ஜீ தமிழ் டிவி, ராஜ் டிவி ஆகிய என பல தொலைக்காட்சிகளில் டப்பிங் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
    இந்த வட இந்திய டப்பிங் சீரியல்கள் மக்களிடையே திடீர் வரவேற்பு பெற, சன் தொலைக்காட்சியின் சில சீரியல்கள் ரேட்டிங்கை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    களத்தில் சன்டிவி

    களத்தில் சன்டிவி

    சன் டிவியும் டப்பிங் சீரியல்கள் மீது ஆர்வம்கொண்டு, தற்போது சுமார் 20 டப்பிங் சீரியல்களை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ‘நாகினி' என்ற டப்பிங் சீரியலை ஒளிபரப்பி வரும் சன் டிவி, அந்த சீரியல் மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளதால் ரொம்ப குஷியடைந்துள்ளது.

    பெண்களிடம் வரவேற்பு

    பெண்களிடம் வரவேற்பு

    சன்டிவியில் பகல் நேரத்தில் காலை 10.30 மணிக்கும் நாகினி சீரியலை மறு ஒளிபரப்பு செய்வதால் பெண்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளதாம். இதனால் பல டப்பிங் சீரியல்களை பகல் நேரத்தில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாம் சன்டிவி நிர்வாகம்.

    போர் சீரியல்களுக்கு செக்

    போர் சீரியல்களுக்கு செக்

    பகல் நேரத்திலும் பிரைம் டைமிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நேரடி தமிழ் சீரியல்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. டல் அடிக்கும் சீரியல்களின் ரேட்டிங்கை உயர்த்த வேண்டும் என்பதுதானாம் அது.

    15 நாட்கள் கெடு

    15 நாட்கள் கெடு

    இன்னும் 15 நாட்களில் குறிப்பிட்ட ரேட்டிங்கை சீரியல் தயாரிப்பாளர்கள் கொண்டு வர வேண்டுமாம், அப்படி கொண்டு வரப்படும் சீரியல்கள் மட்டுமே தொடர்ந்து ஒளிபரப்பப்படும் என்றும், ரேட்டிங் வராத சீரியல்களுக்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு, அந்த சீரியலை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் சன் டிவி நிர்வாகம் தெரிவித்துவிட்டதாம்.

    ஆயிரம் எபிசோடுகள்

    ஆயிரம் எபிசோடுகள்

    போர் அடித்தாலும் கவலைப்படாமல் ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பிய பல சீரியல் நிறுவனங்கள் அதிர்ச்சியடையத் தொடங்கியுள்ளனர்.
    சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பணிபுரியும் இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள், வேறு சேனல்களுக்கு தாவும் முயற்சியில் இறங்கியுள்ளனராம்.

    தொழிலாளர்களுக்கு பாதிப்பு

    தொழிலாளர்களுக்கு பாதிப்பு

    டப்பிங் சீரியல்களினால் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோயுள்ளது என்ற புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் சன் டிவியும் வரிசையாக டப்பிங் சீரியல்களை களமிறக்கினால் தமிழகத்தில் சின்னத்திரை கலைஞர்களின் தொழில்வாய்ப்பு பறிபோகும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    English summary
    Tamil TV serials have begun to lose their charm in Tamil Nadu.Dubbed Hindi and Korean serials have taken their place, edging out the local competition.Sun TV gets more dubbing serial rights sources said.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X