ஏற்காட்டில் இளவரசி... தொடரும் சஸ்பென்ஸ்!
சன் டிவியில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இளவரசி தொடரின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் நடைபெற்று வருகிறது. புதுப்புது திருப்பங்களுடன் இந்த தொடரில் சஸ்பென்ஸ் காட்சிகள் அதிகம் உள்ளதால் இந்த தொடரைப் பார்க்கும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இல்லத்தரசிகள் வேலை பார்த்துக் கொண்டே ரசிக்கும் சீரியல்களில் இளவரசியும் ஒன்று. இது சரியாக மதிய சாப்பாடு நேரத்தில் ஒளிபரப்பாகிறது. சுப்ரமணி இளவரசி ஜோடி சீரியல் வாழ்வில் மட்டுமல்லாது, நிஜவாழ்விலும் ஜோடி சேர்ந்து விட்டதால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துவிட்டது என்றே கூறலாம்.
இளவரசி ஜெயிலில் இருக்கிறாள். சுப்ரமணியோ குழந்தையுடன் மகாவின் வீட்டில் இருக்கிறான். யார் சொன்னாலும் இந்த வீட்டை விட்டுப் போகதே என்று மகா தைரியம் கொடுத்திருக்கிறாள். இந்த சூழ்நிலையில் கதையின் அடுத்த திருப்பம் ஏற்காட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

குளு குளு ஏற்காடு
‘இளவரசி' தொடரின் அடுத்து வரும் பகுதிகள் யாவும் முழுக்க முழுக்க, இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காடு மலைப் பகுதிகளில் படமாக்கப் பட்டுள்ளது.

பிரச்சினையில் இருந்து விடுபடுவாளா?
கொலைப் பழியை ஏற்று ஜெயில் சென்ற இளவரசி, அங்கு அடுக்கடுக்கான பிரச்சனைகளை எதிர் கொள்கிறாள். இந்த பிரச்சனைகளில் இருந்து அவளை விடுவிக்க போராடப் போவது யார்?

மகா – சுப்பிரமணியின் கதை
மகா உடன் சேர்ந்துள்ள சுப்பிரமணி விரைவில் அவளது வீட்டில் இருந்து வெளியேறுவானா? அல்லது அந்த உறவு திருமணத்தில் முடியுமா?

ஜெயிக்கப் போவது யார்?
வலைதளத்தின் மூலம் இளம் பெண்களுக்கு வலை வீசி அவர்களின் கற்பை சூறையாடும் நய வஞ்சகன், உதவி போலீஸ் கமிஷனருக்கே சவால் விடுகிறான். இந்த சவாலில் ஜெயிக்கப் போவது யார்?

மோகன் சர்மா – தமிழரசி
பரம எதிரிகளாக களம் இறங்கியிருக்கும் மோகன் சர்மா, தமிழரசி தம்பதிகள் பிரிந்ததற்கான காரணம் என்ன? இது போன்ற பல கேள்விகளுக்கான விடையை வரும் வாரங்களில் ‘இளவரசி' தொடரில் பரபரப்பாகக் காணலாம்.

சந்தோஷி – ஸ்ரீகர் ஜோடி
இந்த தொடரில் சந்தோஷி, ஸ்ரீகர், வசந்த், மஹாலட்சுமி, அர்ச்சனா, ரேவதிபிரியா, அனுராதா கிருஷ்ணமூர்த்தி , மது மோகன், சுபலேக சுதாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஹெட் ஆப் கிரியேடிவ்ஸ் R. ராதிகா சரத்குமார், இயக்கம் எம்.கே. அருந்தவராஜா.


Click it and Unblock the Notifications











