Gnayiru Doubles: பிக் பாஸுக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்... நல்லா வைக்கறாய்ங்கப்பா பேரு!
சென்னை: சன் டிவியில் ஒரு புது புரோகிராம் ஸ்டார்ட் பண்ணிருக்காங்க. அதாவது ஞாயிறு டபுள்ஸ். இனி ஞாயிற்று கிழமைகளில் மாலை 6:30 இரவு 9::30 என்று இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்து படங்கள்.
இதுக்கு ஞாயிறு டபுள்ஸ் என்று அட்ராக்டிவ் பேரும் வச்சு இருக்காங்க. விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி வருகிற ஞாயிறு முதல் 9:30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
சனி, ஞாயிறுகளில் உலகநாயகன் கமல்ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதால். அந்த நேரத்தில் பெரும்பாலான வீடுகளிலும் உலக நாயகன்தான் ஆக்கிரமிச்சு இருப்பார்.

சன் டிவி
கடந்த ஞாயிறு வரை சன் டிவியில் பட்டிக்காடா பட்டிணமான்னு ஒரு ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாகிட்டு இருந்துச்சு. ஆனா, இனி அந்த நேரத்தில் பார்வையாளர்களை சன் டிவியில் கட்டிப்போடுவது முடியாத காரியமென்று கணக்கு போட்டது. இதற்காக அது போட்ட திட்டம்தான் இந்த பேக் டூ பேக் சினிமா படங்கள். இந்த வாரம் டபுள்ஸ் படங்கள் ஜெயம் ரவி, நடிகை ஹன்சிகா மோத்வானி நடிச்ச ரோமியோ ஜூலியட், சிவா கார்த்திகேயன், சமந்தா நடிச்ச சீமராஜா படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.

வேணாம் ஷோ
இப்போதைக்கு இந்த ரியாலிட்டி கேம் ஷோவை நிறுத்திடலாம்னு கணக்கு போட்ட சன் டிவி, அந்த நேரத்தில் வழக்கமாக படங்களைப் போட்டு விட்டால் வியாபார ரீதியாக வீணாக கைகளை சுட்டுக்கொள்ள தேவையில்லை என்று முடிவுக்கு வந்து, ரியாலிட்டி கேம் ஷோவுக்கு இப்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதற்குப் பதிலாக படங்களை அது கையில் எடுத்துள்ளது.

ஞாயிறு டபுள்ஸ்
பதிலாக ஞாயிறு டபுள்ஸ்னு நிகழ்ச்சிக்கு பேர் வச்சு... இரண்டு படங்களை இடைவெளி இல்லாமல் ஒளிபரப்புவது. எல்லாருமே பிக்பாஸ் பார்க்கமாட்டாங்க என்றாலும், ,பிடிச்ச படத்தை பலரும் பார்ப்பார்கள் என்கிற கணக்கையும் சன் டிவி போட்டு வேலை பார்க்குது. தமிழ் சானல்களிலேயே அதிக அளவிலான படங்களை கையில் வைத்துள்ள ஒரே டிவி சன் டிவிதான்.

சீரியல்களிலும் கவனம்
பகல் மற்றும் இரவு நேரங்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் அதிக கவனமெடுத்து வேலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் உள்ளதாம். சீரியல்களின் முகப்பு போஸ்டர்களை புதிதாக மாற்ற சொல்லி, அழகு, லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா போன்ற சீரியல்களின் முகப்பு போஸ்டர்களும் ஒரே நாளில் மாற்றப்பட்டு உள்ளது. இந்த டபுள்ஸ் படங்கள் எந்த அளவுக்கு ரசிகர்களைக் கவரும் என்று தெரியவில்லை. காரணம், பிக் பாஸ் இப்போதே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது நினைவிருக்கலாம்.
எப்போதும் ஓட்டம்...எப்போதும் மாற்றம்... இதுதானே வியாபார தந்திரம். பார்க்கலாம் சன் டிவி எந்த அளவுக்கு இதில் ஸ்கோர் செய்யப் போகிறதென்று.


Click it and Unblock the Notifications