‘கண்ணான கண்ணே‘ சீரியல் நடிகை காதலரை மணந்தார்… வைரலான திருமண வீடியோ !

சென்னை : சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியலில் நடித்த சஹானா தனது கல்யாண வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி அனைவரும் அவருககு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இவர்கள் இருவருக்கும் சென்னையில் விரைவில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கண்ணான கண்ணே

கண்ணான கண்ணே

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் கண்ணான கண்ணே. இந்த சீரியலில் பப்லு பிரித்விராஜ், லிவிங்ஸ்டன், நித்யா தாஸ், ராகுல் ரவி, அக்ஷிதா, நிமேஷிகா உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இத்தொடர் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

விரும்பி பார்க்கும் சீரியல்

விரும்பி பார்க்கும் சீரியல்

இந்த தொடர் விறுவிறுப்படைந்த தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் முன்னேறி வருகிறது. இதற்கு காரணம் இந்த சீரியலில் நடிக்கும் நடிகர்,நடிகைகள். இந்த தொடரில் அதிக இளம் நடிகர்கள் இருப்பதால் இத்தொடரை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இத்தொடரை விரும்பி பார்த்து வருகின்றனர்.

சீரியலில் விறுவிறுப்பு

சீரியலில் விறுவிறுப்பு

அப்பா மகளின் பாசம் ஒருபுறம் என்றாலும் இரண்டாவது அம்மாவா இருந்தாலும் தன் பிள்ளை போலவே கணவரின் குழந்தையும் பார்க்கும் கதாபாத்திரம் இந்த தொடருக்கு இருக்கும் சிறப்பு அம்சமாகும். யுவா, மீராவின் காதல் பலருக்கும் பிடித்திருக்கிறது. மீராவின் திருமணம் நடைபெறுமா நடக்காதா என்று சஸ்பென்ஸை கொடுத்து சீரியலை விறுவிறுப்பாகி இருந்தனர்.

சுலோச்சனா மூத்த நடிகை

சுலோச்சனா மூத்த நடிகை

இந்த சீரியலில் மூத்த நடிகை சுலோச்சனா நடித்திருக்கிறார். இந்த சீரியலில் பிரத்திவிராஜின் அம்மாவாக தனலட்சுமி கதாபாத்திரத்தில் சுலோச்சனா நடித்துள்ளார். நடிகை சுலோச்சனா 80களின் முன்னணி நடிகையாவார். இவர் ரஜினி ,கமல், பாக்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். பாக்யராஜூடன் இவர் நடித்த தூறல் நின்னு போச்சு திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது.

திருமண வீடியோ

திருமண வீடியோ

இந்நிலையில், இந்த சீரியிலில் நடிக்கும் சஹானா ஷெட்டிக்கு கடந்த வாரம் திருமணம் நிகழ்ந்துள்ளது. இந்த வீடியோவை சஹானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திருமணத்தின் போது, சில சில குறும்புகளையும் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. புது மண தம்பதிகளுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

திடீரென விலகினார்

திடீரென விலகினார்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார் சஹானா. பின்னர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகு சீரியலில் நடித்தார். இதில் தலைவாசல் விஜய், ரேவதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களின் மகளாக நடித்திருந்த சஹானா திடீரென அந்த சீரியலிலிருந்து விலகினார்.

காதலருடன் ரொமான்ஸ்

காதலருடன் ரொமான்ஸ்

தற்போது இவர் கண்ணான கண்ணே தொடரில் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும், சமீபகாலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் யார் இவர் என்றும், என்ன பப்ளிக்கா இப்படி செய்றீங்க என்று கேட்டு வந்தனர். அந்த வீடியோக்கள் அனைத்தும் வைரலாகின.

வரவேற்பு நிகழ்ச்சி

திருமணம் முடிந்த பிறகு கணவருடன் ரொமான்ஸ் வீடியோ மற்றும் தாலிக்கட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை அடுத்து சஹானாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் சென்னையில் விரைவில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X