twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கின்னஸ் சாதனை விருது பெற்றது சன்டிவியின் நாதஸ்வரம்

    By Mayura Akilan
    |

    சன் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட, 'நாதஸ்வரம்' தொடருக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.

    சன் டி.வி.யில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு 'நாதஸ்வரம்' தொடர் ஒளிபரப்பப்படுகிறது. இந்த தொடரின் ஆயிரமாவது எபிசோட், கடந்த 5ம் தேதி காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் இருந்து இடைவேளை இன்றி, தொடர்ச்சியாக சன் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்தக் காட்சியை சரத் கே சந்தர் ஒளிப்பதிவு செய்தார்.

    உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் தொடர்ச்சியாக ஒரே ஷாட்டில், 23 நிமிடங்கள் 25 வினாடிகள் கொண்ட காட்சி, அன்றைய தினம் ஒளிபரப்பா

    நேரடி ஒளிபரப்பில் இசை

    நேரடி ஒளிபரப்பில் இசை

    நாதஸ்வரம்' தொடர் சன் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்ப ப்பட்ட போதே படப் பிடிப்பு தளத்தில் இருந்து பின்னணி இசையை சஞ்சீவ் ரத்தன் நேரடியாக அமைத்திருந்தார்.

    90 சதவிகித புதுமுகங்கள்

    90 சதவிகித புதுமுகங்கள்

    பிரபல நடிகர்கள் மௌலி, பூ விலங்கு மோகன், நடிகை ஸ்ரித்திகா தவிர மற்ற 90 சதவீதம் பேர் புதுமுகங் களே நடித்திருந்தனர்.

    கின்னஸ் சான்றிதழ்

    கின்னஸ் சான்றிதழ்

    நேயர்களின் பாராட்டைப் பெற்ற இந்த சீரியலுக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. கின்னஸ் நிறுவன பிரதிநிதி லூசியா சிங்க யேசி இதற்கான சான்றிதழை வழங்கினார்.

    திருமுருகன்

    திருமுருகன்

    சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் சார்பாக, சன் குழுமத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பு பிரிவு தலைவர் தூரன் கந்தசாமியும், நாதஸ்வரம் இயக்குநர், தயாரிப்பாளர் திருமுருகனும் கின்னஸ் சான்றிதழை லூசியா சிங்க யேசியிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

    சாதனைக்கு பாராட்டு

    சாதனைக்கு பாராட்டு

    சான்றிதழை வழங்கி பேசிய லூசியா சிங்க யேசி, ஆய்வுக்குப் பின்னர் ஒரே ஷாட்டில் 23 நிமிடங்கள், 25 விநாடிகள் தொடர்ச்சியாக ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடர் கின்னஸ் விருதுக்கு தகுதி பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் உறுதி செய்கிறேன் என்றார். சாதனை படைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

    சன் டிவிக்கு நன்றி

    சன் டிவிக்கு நன்றி

    புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட புதிய முயற் சிக்கு, கின்னஸ் விருது கிடைத்திருப்பது நெகிழ்ச்சி தருவதாகவும், இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கு ஊக்கம் அளித்து உறுதுணையாக இருந்த சன் குழும தலைவர் கலாநிதி மாறனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக வும் ‘நாஸ்தவரம்' தொடரின் இயக்குநர் திருமுருகன் தெரிவித்தார்.

    புதிய சாதனைகள் படைக்கத் திட்டம்

    புதிய சாதனைகள் படைக்கத் திட்டம்

    மேலும், தங்களுடைய பல்வேறு முயற்சிகளுக்கு சன் தொலைக்காட்சி ஆதரவு அளித்து வருவதாகவும், இதேபோல பல புதிய சாதனைகள் படை க்க தாங்கள் திட்டமிட்டிருப்பதாகவும் திருமுருகன் தெரிவித்தார்.

    English summary
    Nadaswaram along with sun tv jointly get guiness world record by showing live serial for 23 minutes 25 seconds in single shot.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X