நாதஸ்வரம்: பிரசாத் – மகா திருமணம் நடக்குமா?
நாதஸ்வரம் தொடர் 850 வது எபிசோடினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பிரசாத் - மகா திருமணம் நடைபெறுமா என்பதுதான் இனி வரும் எபிசோடுகளில் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சொக்கலிங்கம் - மீனாட்சி தம்பதியரின் மூத்த மகன் காணாமல் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை பிரசாத்தின் அப்பா அம்மாவிடம் அழுது கொண்டே கூறுகிறாள் மீனாட்சி.
சிறுவயது போட்டோவை பார்த்த உடன் திடுக்கிடுகின்றனர் பிரசாத்தின் பெற்றோர்கள். ஏனெனில் தாங்கள் கண்டெடுத்து வளர்த்து வரும் மகன்தான் மீனாட்சி - சொக்கலிங்கம் தம்பதியரின் மகன் என்பது தெரியவருகிறது.

திருமணத்தை நிறுத்த திட்டம்
கோபியின் அத்தை மகள் மகாவை பிரசாத்திற்கு திருமணம் முடிக்க பேசி முடிவு செய்துள்ளனர். இதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று திட்டம் போடுகின்றனர் பிரசாத்தின் தங்கையும் அவரது கணவர் சுப்ரமணியும்.

திடுக்கிடும் பெற்றோர்
தங்கள் மகன் பிரசாத் சொக்கலிங்கத்தின் மகன் என்பது தெரியவந்தால் எங்கே தங்களின் கையை விட்டு போய்விடுவானோ என்று அஞ்சுகின்றனர் பிரசாத்தின் தற்போதய பெற்றோர்கள். எனவே அவர்களும் திருமணத்தை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்கின்றனர்.

ஊரை விட்டு போகலாம்
இந்த முடிவு சுப்பிரமணிக்கு சந்தோசத்தை தருகிறது. காரைக்குடியில் இருந்தால்தானே பிரச்சினை. எப்படியாவது ஊரைவிட்டு குற்றாலத்திற்குப் போய்விடலாம் என்று முடிவு செய்து பிரசாத்தின் பெற்றோர்கள் குடும்பத்தோடு கிளம்புகின்றனர்.

மகா – பிரசாத்
இதனிடையே பிரசாத்- மகா இருவரும் வீடு வீடாக திருமண பத்திரிக்கையை கொடுத்து வருகின்றனர். திடீரென்று பள்ளியில் வேலை பார்க்கும் போது பிரசாத்தின் காலில் அடிபடுகிறது. அப்போது தன்னுடைய அருகிலேயே இரு என்று மகாவை கெஞ்சுகிறான் பிரசாத்.

ராகினியின் நிலை
கோபியின் தங்கை ராகினியின் முதல் திருமண வாழ்க்கை பிரச்சினையானாதால் விவாகரத்து வரை போயுள்ளது. அவளது நிலை தெரிந்து அவளை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள நினைக்கிறான் ராகினியின் கணவனின் நண்பன். அதற்கு ராகினி என்ன சொல்லப் போகிறாள்.

பரமுவின் வாழ்க்கை
தனது கணவன் குடிகாரன் ஆகிவிட்டானே என்று அழும் பரமுவின் வாழ்க்கை என்னவாகும்? மருமகள் மலருடன் மீனாட்சி ராசி ஆகிவிடுவாளா? பிரசாத் மகா திருமணம் நடக்குமா? நெல்லியாண்டவரின் பிராத்தனை பலிக்குமா?, ராகினி இரண்டாவது திருமணம் செய்து கொள்வாளா? என்பது போன்ற பல கேள்விகளுடன் இனிவரும் எபிசோடுகள் இருக்கின்றனர் தொடர் தயாரிப்பாளர்கள்.


Click it and Unblock the Notifications











