வாயை வைத்து மெதுவா குடிடா.. வில்லன் நடிகரை பாடாய் படுத்தும் ஜி.பி.முத்து.. சிவாங்கி அடித்த கமெண்ட்!
சென்னை: சன் டிவியில் வாரந்தோறும் பார்வையாளர்களை கவரும் வகையில் புதிய நிகழ்ச்சி தொடங்கி வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில் பாட்டு பாடி அசத்திய பிரபலம் தொகுத்து வழங்கி வருகிறார். இதில், பெரிசுங்களுக்கும், பொடுசுகளுக்கும் நடக்கும் போட்டிதான் ரகளையாக பேசப்படுகிறது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற வில்லன் நடிகர் பீடிங் பாட்டிலை குடிக்க முடியாமல் திணறுவது பார்க்கவே சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் நானும் ரவுடிதான் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் நடக்கும் போட்டிதான் மையக்கருவாக இருக்கிறது. இதில் யாரை இவர்கள் ஜெயிக்கிறார்களோ அவர்களே ரவுடியாக ஃபார்ம் ஆவார்கள், இதில் ஒரு பக்கம் குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் பிரபலம் சிவாங்கியும், மற்றொரு பக்கம் சன் டிவி தொகுப்பாளர் அஸ்வத்தும் இருக்கின்றனர். இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடக்கும் போட்டிதான் பார்க்கவே ரகளையாக இருக்கிறது.

வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் உள்ளன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் திரை பிரபலங்களும் ஈகோ பார்க்காமல் சிறுவர்களுக்கு இணையாக போட்டி போட்டு கொடுத்த டாஸ்க்கில் வெற்றி பெறுகின்றனர். சிறுவர்கள் சாமர்த்தியத்தால் பிரபலங்கள் மொக்கை வாங்குவதும் உண்டு. தற்போது அதேபோன்று நானும் ரவுடிதான் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. இதில், போட்டியாளராக வந்த வில்லன் நடிகர் கொடுத்த டாஸ்க்கை பார்த்து மிரண்டு போய்விட்டார். சிவாங்கி அவரை வார்த்தையாலே கமெண்ட் கொடுத்து ரகளை செய்திருக்கும் புரோமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.

நாளை ஒளிபரப்பாகும் நானும் ரவுடிதான் நிகழ்ச்சியில் ஜிகர்தண்டா படத்தில் சேதுவிற்கு நண்பனாக நடித்தவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். அவருடன் ஜி.பி.முத்துவும் வந்திருக்கிறார். இந்நிகழ்ச்சியில் சிறுவனுக்கும் ஜிகர்தண்டா பட நடிகருக்கும் போட்டி நடக்கிறது. இதில், புட்டி பாட்டிலை யார் முதலில் குடித்து முடிக்கிறார்களோ அவர்களே வின்னர் என அறிவிக்கப்படுவதாக சிவாங்கி தெரிவிக்கிறார். இதே கேட்டு ஷாக் ஆன அவர் சிறுவனிடம் பார்த்து மெதுவா குடி.. மொத்தமா குடிச்சு முடிச்சுடாதே என்று கூறுகிறார். அதற்கு அந்த சிறுவன் சூப்பரா இருக்கு. நான் குடித்து முடித்துவிடுவேன் என தெரிவிக்கிறான்,. அப்போது சிவாங்கி அதெல்லாம் அண்ணன் கொஞ்சம் மிச்சம் வைக்காம குடித்துவிடுவார் என தெரிவிக்க போட்டி அனல் பறக்கிறது. பார்க்க என்னங்கடா பித்தலாட்டமா இருப்பது போல் தெரிந்தாலும் ரகளையாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

ஜி.பி முத்து ஜிகர்தண்டா பட நடிகரின் வாயில் புட்டி பாலை போட்டு அமுக்கும் காட்சிகள் பார்க்க சிரிப்பலையை ஏற்படுத்துகிறது. நானும் ரவுடிதான் நிகழ்ச்சியில் சிவாங்கி தொகுப்பாளராக கலக்கி வருகிறார். சிவாங்கி ரியாக்சனை பார்த்து ரசிகர்கள் ஆஹா ஏதோ விவகாரமான போட்டியா இருக்கே என்றும் தெரிவி்ககின்றனர். ஆனால், கொஞ்சம் கூட அருவருக்கத்தக்க வகையில் இல்லை என்றும் தெரிவித்தனர். மேலும், நாளை இதைவிட வேற என்ன டாஸ்க் வைத்திருக்கிறார்கள் என்ற ஆவலும் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. நானும் ரவுடிதான் ரகளையான சம்பவம் தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











