வாணி விஸ்வநாத்தின் ‘காற்றினிலே வரும் கீதம்’
சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வருகிறார் நடிகை வாணி விஸ்வநாத்.
பூந்தோட்ட காவல்காரன் படத்தில் அறிமுகமான வாணி விஸ்வநாத்தை நினைவிருக்கிறதா? இவர்தான் இப்போது சன்டிவியின் புதிய தொடரில் அறிமுகமாகிறார்.
ரெட்சன் புரொடக்சன்ஸ் ஜே.கே. ஆனந்த் தயாரிப்பில், சுந்தர் கே. விஜயன் இயக்கும் காற்றினிலே வரும் கீதம் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகிறார் வாணி விஸ்வநாத்.
குட்டிபத்மினி, ராதிகா, ரோஜா, ரம்யாகிருஷ்ணன் வரிசையில் இப்போது வாணிவிஸ்வநாத்தும் இணைந்துள்ளார். இவர் நடிக்கும் தொடர் விரைவில் சன்டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

விஜயகாந்த் படத்தில் அறிமுகம்
விஜயகாந்த் நடித்த பூந்தோட்டக் காவல்காரன் படத்தில் அறிமுகமாகி, நல்லவன் படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்தார் வாணி விஸ்வநாத்.
துறு துறு நடிப்பினால் புகழ்பெற்றவர் வாணி.

மலையாளக் கரையோரம்...
தமிழ் பட இயக்குநர்கள் கண்டு கொள்ளாத காரணத்தால் மலையாளதேசம் பக்கம் ஒதுங்கினார். அங்கு அவருக்கு ஹீரோக்கள் அளவுக்கு இமேஜ் உள்ளது.

இதயத்திருடனில் நடித்தார்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கதாநாயகியின் அம்மாவாக இதயத்திருடன் படத்தில் நடித்தார். அழகு அம்மா கிடைத்துவிட்டார் என்று இருந்த நேரத்தில் ஆனந்த தொல்லை படத்தில் பவர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்தார்.

சின்னத்திரையில் அறிமுகம்
இந்த நிலையில் இப்போது ரெட்சன் புரொடக்சன்ஸ் சார்பில் ஜே.கே. ஆனந்த் தயாரிக்கும் ‘காற்றினிலே வரும் கீதம்' தொடர் மூலம் சின்னத்திரையில் அடிஎடுத்து வைக்கிறார். இந்த தொடரை சுந்தர் கே. விஜயன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே சன் டிவியில் ஒளிபரப்பான கேள்வியின் நாயகனே, என்பெயர் ரெங்க நாயகி, அலைகள், செல்வி போன்ற மெகா தொடர்களை இயக்கியவர்.

பிரபலங்கள் பின்னணியில்
இந்த மெகா தொடரில் வாணி விஸ்வநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் சுனில், நவ்யா, ரவி உள்பட பலர் நடிக்கின்றனர். பிரபல கதை, வசன கர்த்தா ‘அன்னக்கிளி' ஆர்.செல்வராஜ், இத்தொடருக்கு கதை திரைக்கதை, வசனம் எழுதுகிறார். ‘எங்கேயும் எப்போதும்' படத்தின் இசையமைப்பாளர் சத்யா இசை அமைப்பில், காதல்மதி எழுதி, காயத்ரி பாடிய ஒரு அருமையான பாடல் இந்த தொடருக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மைசூரில் படப்பிடிப்பு
மைசூர், கூர்க் போன்ற இடங்களில் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழா இன்று (17.02.2013) சென்னையில் தொடங்கியது. இயக்குனர்கள் ‘சில்லுன்னு ஒரு காதல் கிருஷ்ணா, ‘வீராப்புபத்ரி, மணிபராதி, ‘அன்னக்கிளி ஆர்.செல்வராஜ், தயாரிப்பாளர் ராதா கிருஷ்ணசாமி உட்பட பலர் கலந்து கொண்டு வழ்த்தினார்கள்


Click it and Unblock the Notifications











