சன் டிவியில் இளவரசி அவுட்… தாமரை இன்…

By Mayura Akilan

சன் டிவியில், மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த ‘இளவரசி' தொடர், இன்றுடன் ஒருவழியாக நிறைவு பெறுகிறது. அதனை தொடர்ந்து திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை ‘தாமரை' என்கின்ற புதிய மெகா தொடரை ஒளிபரப்ப உள்ளது. இது ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாகும்.

இதுவரை எந்த ஒரு மெகா தொடரிலும் தொடாத ஒரு பிரச்சனையை முன் நிறுத்தும்வகையில், இந்த மெகா தொடரான ‘தாமரையின்' கதைக்களம் அமைந்துள்ளதாக அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முதலில் ராசி என்றுதான் புதிய தொடருக்கு பெயர் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் என்ன நினைத்தார்களோ, தொடரின் பெயரை தாமரை என்று மாற்றிவிட்டனர்.

நடுத்தர மக்களின் வாழ்க்கை

நடுத்தர மக்களின் வாழ்க்கை

நடுத்தர மக்களின் வாழ்க்கையில் அன்றாடம் நடைபெறும் வாழ்க்கை சிக்கலையும், அதனால் ஏற்படும் உறவு சிக்கல்களையும் சொல்ல போவதுதான், இக்கதையின் சாராம்சம்.

தேவிபாலா கதை

தேவிபாலா கதை

இத்தொடரின் கதை, திரைக்கதையை எழுத்தாளர் தேவி பாலா எழுத, வசனத்தை பிரசன்னா எழுதுகிறார். ‘பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு' என்ற பழமொழிக்கு ஒரு புது அர்த்தத்தை கொடுத்திருக்கிறார் இதன் கதாசிரியர்.

நம்ம வீட்டு பிரச்சினையாம்

நம்ம வீட்டு பிரச்சினையாம்

இத்தொடரை காணப் போகும் தாய்மார்கள் இத்தொடரில் வரும் பிரச்சனைகள், தங்கள் வீட்டிலும் அப்படியே பிரதிபலிப்பதாக, அவர்களை உணர வைக்கும்விதத்தில், திரைக்கதை அமைத்திருப்பதாகச் சொல்கிறார் தொடரின் கதாசிரியரான எழுத்தாளர் தேவிபாலா.

கிரியேட்டிவ் ஹெட் ராதிகா

கிரியேட்டிவ் ஹெட் ராதிகா

ராடான் மீடியா ஒர்க்ஸின் ஹெட் ஆப் கிரியேடிவ்ஸ் திருமதி. R.ராதிகா சரத்குமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த புதிய தொடரின் இயக்குனரும், கதாசிரியரும் இனணந்து இந்த குடும்பத் தொடருக்கு புதிய மெருகை ஏற்றியுள்ளனராம்.

ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல்

ஆயிரம் எபிசோடுகளுக்கு மேல்

பல உணர்ச்சிப்பூர்வமான போராட்டங்களையும், திடீர் திருப்பங்களையும் உள்ளடக்கிய இத்தொடர் இமாலய வெற்றி அடைவது நிச்சயம் என்கின்றனர் இதன் தயாரிப்பாளர்கள். விக்ரமன் ஒளிப்பதிவு செய்கிறார். பல சீரியல்களை இயக்கிய எம்.கே.அருந்தவராஜா இயக்குகிறார்.

நிரோஷா, நீலிமா ராணி

நிரோஷா, நீலிமா ராணி

இத்தொடரில் அஸ்வின், நீலிமா ராணி, சாய்லதா T.V.வரதராஜன், L..ராஜா, பபிதா, சாய் பிரசாந்த், M.J.ஸ்ரீராம், ஸ்வப்னா, சாம்பவி, ஸ்ரீதர், ராணி, ஜெய்ராம் இவர்களுடன் நடிகை நிரோஷாவும் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சின்னத்திரையில் நடிக்கவிருக்கிறார்.

திங்கட்கிழமை முதல்

திங்கட்கிழமை முதல்

உங்கள் சன் டிவியில் வரும் நவம்பர் மாதம் 3-ஆம் தேதி முதல், தினமும் திங்கள் முதல் சனிக்கிழமைவரை பிற்பகல் 1.30க்கு ‘தாமரை' தொடர் ஒளிப்பரப்பாக உள்ளது.

எத்தனை ஜோடி?

எத்தனை ஜோடி?

சீரியலின் முன்னோட்டமே ரசிகர்களை கவரும் வகையில் ஒளிபரப்பாகி வருகிறது. இளவரசி சீரியலைப் போல மூன்று மனைவி கதையாக இல்லாமல் இருந்தால் ரசிகர்களையும் இல்லத்தரசிகளையும் கவருவாள் இந்த தாமரை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X